நேரு கட்டிக்காத்த மதச்சார்பின்மையை இந்திய அரசியலின் ஓரத்திற்குத் தள்ளிவிட்ட 2019 லோக்சபா தேர்தல் முடிவுகள் -  த இந்து ஆசிரியர் தலையங்கம்

Published By: Daya

25 May, 2019 | 02:33 PM
image

2019 லோக்சபா தேர்தல் முடிவுகளை அடுத்து இந்துத் தேசியவாதம் ரூபவ் தனது தேசத்தின் அடிப்படைப் பண்பு என்று நேரு போற்றிப் பேணிய மதச்சார்பின்மையை இந்திய அரசியலின் ஓரத்திற்குத் தள்ளிவிட்டிருக்கிறது என்று கூறியிருக்கும் இந்தியாவின் பிரபல தேசிய ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான “ த இந்து” மதச்சார்பற்ற கோட்பாடுகளைப் போற்றிப் பேணுமாறு அல்லது இந்திய நிறுவனங்களின் கண்ணியத்தையும் ரூபவ் நேர்மையையும் நாணயத்தையும் பாதுகாக்குமாறு பாரதிய ஜனதாவை வலியுறுத்திக் கேட்பது அதன் அடிப்படை நம்பிக்கைகளைக் கைவிடுமாறு கேட்பதற்குச் சமனானதாக அமையும் என்று குறிப்பிட்டிருக்கின்றது.


இந்தியத் தேர்தல் முடிவுகள் குறித்து நேற்று வெள்ளிக்கிழமை நீண்டதொரு ஆசிரியர் தலையங்கத்தைத் தீட்டியிருக்கும் அந்தப் பத்திரிகை ரூபவ் மோடியின் இரண்டாவது பதவிக்காலம் முன்னைய பதவிக்காலத்தையும் விட சகல சமூகங்களையும் அரவணைக்கும் என்று நம்பிக்கையும் வெளியிட்டிருக் கிறது.

ஆசிரியர் தலையங்கத்தின் விபரம் வருமாறு: 


இந்தியாவின் 17 ஆவது பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியின் தெளிவானதும் உறுதியானதுமான தன்மை அந்தக் குடியரசின் பயணத்தில் தெள்ளத்தெளிவான ஒரு நெறிவிலகல் புள்ளியைக் குறித்து நிற்கின்றது. 2014 ஆம் ஆண்டு 16 ஆவது பொதுத்தேர்தல் பாரதிய ஜனதாவை இந்திய அரசியலின் முதல்நிலைத் துருவமாக உயர்த்தியதுடன் காங்கிரஸ் கட்சியை ஒரு தொலைதூர இரண்டாவது இடத்திற்குப் பின்தள்ளியது என்றால் 2019 பொதுத்தேர்தல் பாரதிய ஜனதாவை ஏனைய சகல கட்சிகளையும் விஞ்சிய பிரம்மாண்டமானதொரு சக்தியாக நிலைநிறுத்தியிருக்கிறது.

தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமைக்கான அங்கீகாரமாக நோக்கப்படுகின்ற அதேவேளை, இந்த வெற்றி மீதான அவரது முத்திரை தனித்துவமானதாக அமைந்திருக்கின்றது. ஆனால் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய – அதன் அலைவீச்சை இந்தளவிற்கு அகலமும் ஆழமுமாக்கிய உட்கிடையான கட்டமைப்புக் காரணிகளை அலட்சியம் செய்வது மடமையாக இருக்கும்.

ஒரு கருத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்குச் சக்திவாய்ந்த ஆளுமைகள் தேவை. ஆனால் அந்தக் கருத்துக்கள் தேசத்தினது அல்லது மக்களினது போக்கை வரையறுக்கும் ஆளுமைகளை விடவும் கூடுதலான காலத்திற்கு நிலைபேறானவையாக வாழ்கின்றன. அதனால் தேர்தல் முடிவுகளை இந்துத்வாவிற்கு அல்லது இந்துத் தேசியவாதத்திற்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு தேர்தல் வழியான அங்கீகாரமாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்துத் தேசியவாதமே பாரதிய ஜனதாவையும்ரூபவ் அதன் மூதாதையர்களையும் (இந்துத்வா என்ற தலைப்பில் ஆய்வுகளை எழுதிய விநாயக் தாமோதர் சவர்கார் காலத்திலிருந்து சுமார் ஒரு நூற்றாண்டாக) வழிநடத்திய கோட்பாடாகும். சவர்காரின் கோட்பாடுகளினால் கவரப்பட்டவராகத் தன்னைக் கூறிக்கொள்கின்ற மோடியே இந்தியா தற்பொழுது காண்கின்ற மாறுதலின் ஊக்கியாக விளங்குகின்றார். சுதந்திரப் போராட்ட இயக்கத்திலிருந்து வளர்ந்த இந்தியாவின் கோட்பாடு குடியரசின் வரலாற்றில் பெரும்பகுதியில் நிலைத்திருந்தது. இப்போது அந்தக் கோட்பாடு பின்னடைவிற்கு உள்ளாகியிருக்கிறது.

இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவகர்லால் நேருவினால் உயிர்த்துடிப்புடன் ஆதரித்துப் பாதுகாக்கப்பட்ட அந்தக் கோட்பாடு ஆயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த நாகரிகம், வேதங்கள், உபநிடதங்களில் இருந்து உத்வேகத்தைப் பெற்றதுடன் விஞ்ஞான பூர்வமான உணர்வும் தாராளவாதப் பண்புகளுடனுமான ஒரு நவீன சமூதாயத்திற்குள் இந்தியாவைக் கட்டமைக்க உதவியது. அந்தக் கோட்பாடு நேருவின் மறைவிற்குப் பின்னரும் உயிர் வாழ்ந்தது. ஆனால் பிறகு படிப்படியாக அருகத் தொடங்கியது.


இந்துத்வாவின் ஆரம்ப வருடங்களில் அதன் சார்பாளர்களின் ஏளனத்திற்குப் பிரதான இலக்குகளாக நேருவும் அவரது ஆசான் மகாத்மா காந்தியும் விளங்கினார்கள். 2019 பொதுத்தேர்தல் முடிவுகளையடுத்து இந்துத்வா நேரு உறுதியாகப் பின்பற்றிய மதச்சார்பின்மையை இந்திய அரசியலின் ஓரங்களுக்குத் தள்ளிவிட்டது. நேருவின் பூட்டப்பிள்ளையான ராகுல் காந்தியினால் இப்போது தலைமை தாங்கப்படும் காங்கிரஸ் கட்சி 2014 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெளிக்காட்டிய செயற்பாட்டை விடவும் இத்தடவை ஓரளவிற்குச் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றது.


ஆனால் லோக்சபாவில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கான ஆசனங்களைக் கூட காங்கிரஸினால் பெறமுடியவில்லை. 2019 தீர்ப்பு லோக்சபாவிற்கு 120 உறுப்பினர்களைச் சேர்த்து அனுப்புகின்ற இரு மாநிலங்களான உத்தர பிரதேசத்திலும் பீஹாரிலும் சமூகநீதி அரசியலை சின்னாபின்னமாக்கிவிட்டது. 1980களில் இருந்து இந்துத்வா வளர்ச்சியடைந்த போது அதற்குச் சமாந்தரமாக வட இந்தியாவிலும் ரூபவ் மேற்கிந்தியாவிலும் உள்ள பகுதிகளில் பின்தங்கிய சாதிகளைச் சேர்ந்த மக்களை அணிதிரட்டுகின்ற ஒரு புதிய அலையொன்றும் பிரவாகமெடுத்தது.


அந்த அலை ஆட்சியதிகாரத்தின் மீதான நேருகால மேட்டுக்குடியின் இறுக்கமான பிடியைக் கேள்விக்குள்ளாக்கியது. சமூகநீதி அரசியலை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் அல்லது பிராந்தியப் பெருமையை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் காங்கிரஸைப் பலவீனப்படுத்திய அதேவேளைரூபவ் அவை பாரதிய ஜனதாவுடன் அவ்வப்போது கூட்டுச்சேர்ந்த போதிலும் கூட அக்கட்சியையும் சந்தேகத்துடனேயே நோக்கினர். மிகவும் கெட்டித்தனமான முறையில் கூட்டணிகளை அமைக்கும் செயற்பாடுகளின் ஊடாக பாரதிய ஜனதா கட்சி அதன் சொந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக காங்கிரஸ் அல்லாத பல கட்சிகளையும்ரூபவ் குழுக்களையும் பயன்படுத்திக் கொண்டதுடன் நாளடைவில் குஜராத் போன்ற பல மாநிலங்களில் அவற்றை விழுங்கிவிட்டது.

உத்தர பிரதேசத்திலும்ரூபவ் பீஹாரிலும் பின்தங்கிய இந்து சாதிகள் மத்தியில் ஆழமான ஆதரவைக் கொண்ட சமூகநிதிக் கட்சிகள் அந்த மாநிலங்களில் கணிசமான எண்ணிக்கையில் வாழும் மஸ்லிம்களுடன் கூட்டணி சேர்ந்து இந்துத்வா திட்டத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக விளங்கின.
2014 ஆம் ஆண்டில் அந்த நிலைமையை தலைகீழாக்கிய பாரதிய ஜனதா இரு மாநிலங்களிலும் மகத்தான வெற்றியைப் பெற்றது. கடந்த வியாழக்கிழமை அதே தோற்றப்பாடு நீதித்து நிலைத்து நிற்பதை பாரதிய ஜனதா நிரூபித்தது. பீஹாரில் ராஷ்திரிய ஜனதா தளமும்ரூபவ் உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்திரிய லோக்தல் ஆகியவை அவற்றின் தலைவர்களால் குடும்ப ஆதிக்கச் சொத்துக்களாக்கப்பட்டு ஊழலில் மூழ்கி நிலைகுலைந்து போயின.

ஆனால் பீஹாரில் ராம்விலாஸ் பஸ்வாலின் லோக் ஜனசக்தி போன்ற கட்சிகளும், மஹராஷ்டிராவில் சிவசேனாவும் அதே முறைகேடுகளைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகின்ற போதிலும் பாரதிய ஜனதாவுடனான கூட்டணியில் அவை செழித்தன. மோடியின் கடந்த 5 வருடகால அரசாங்கத்தின் பிரதான நோக்காக இருந்த தீவிர தேசியவாத நிகழ்ச்சித்திட்டங்களால் வலுவூட்டப்பட்ட ஒன்றாகவே 2019 பொதுத்தேர்தல் முடிவுகளைப் பார்க்க வேண்டும். பாரதிய ஜனதாவுக்கு எதிரான கட்சிகளில் நிலவிய ஊழலும்ரூபவ் குடும்ப அரசியல் ஆதிக்கமும் இத்தகைய முடிவுகள் தேர்தலில் வருவதற்குக் கிளைக்காரணிகளாக அமைந்திருக்கக்கூடும்.

மோடி அரசாங்கத்தின் நலன்புரித் திட்டங்களும் ஒரு பங்கை ஆற்றியுள்ளன. ஆனால் அந்தத் திட்டங்கள் அல்லது பொருளாதார அபிவிருத்தி குறித்துத் தேர்தல் பிரசாரங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளில் தான் உண்மையில் இத்தேர்தலில் பெரும் வெற்றியைத் தந்தவை என்று கூறிவிட முடியாது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலும் அதற்கு இந்தியாவின் பதிலடியும் பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரசாரத்திற்குள் சரியாக இறுகப்பொருந்திவிட்டன. மகாத்மா காந்தியைக் கொலை செய்தவரை ஒரு தேசபக்தரென்று புகழ்ந்துரைத்த ஒருவர் போபால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் ஒரு பயங்கரவாதச் சம்பவமொன்றில் ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவராவார். அவரின் வெற்றி இந்துத்வாவின் வல்லமையை முனைப்பாக வெளிக்காட்டி நிற்கின்றது.

கர்நாடகாவைத் தவிர தென்மாநிலங்கள் இந்துத்வாவினால் எடுபடாமல் இருக்கின்றன. ஆனால் மேற்கு வங்காளத்திலும்ரூபவ் ஒடிசாவிலும் பாரதிய ஜனதா செய்திருக்கும் முனைப்பான ஊடுருவல்கள் மொழி அரசியல் மற்றும் கலாசாரக் காரணிகள் வரலாற்று ரீதியாக அக்கட்சிக்கு அனுகூலமற்றவையாக விளங்கிவரும் பகுதிகளில் கூடத் தனது ஆற்றலை நிரூயபிக்கக்கூடியதாக அக்கட்சி இருக்கிறது என்பதைக் காட்டுகின்றது.

திராவிட அரசியல் பல தசாப்தங்களாக ஆழக்காலூன்றியிருக்கின்ற தமிழ்நாடு மீண்டுமொரு தடவை பாரதீய ஜனதாவின் அலைக்கெதிராக வாக்களித்திருக்கின்றது. கேரளாவும் அவ்வாறே செய்திருக்கின்றது. ஆனால் தெலுங்கானாவில் பாரதிய ஜனதா பெற்ற வெற்றிகள் மிதமானவையாக இருந்தாலும் தென்னிந்தியா என்றென்றைக்குமே இந்துத்வா ஊடுருவ முடியாத மாநிலங்களாகத் தொடர்ந்திருக்காமல் போகலாம் என்பதற்கான அறிகுறியாகும்.

ஒடிசாவில் ஐந்தாவது தடவை பதவிக்கு வந்திருக்கும் பிஜு ஜனதாதல்லும்ரூபவ் ஆந்திர பிரதேசத்தில் வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் பெற்ற வெற்றிகள் அந்த மாநிலங்களில் மொழி மற்றும் கலாசார அடையாளங்கள் தொடர்ந்து செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதற்கான அறிகுறிகளாகும். பஞ்சாப் மாநிலமும் கூட தனியான போக்கைக் காட்டுகின்ற ஒரு மாநிலமாக விளங்குகின்றது. சீக்கியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அது காங்கிரஸை நோக்கிச் சாய்ந்திருக்கின்றது.

மதச்சார்பற்ற கோட்பாடுகளைப் போற்றிப்பேணுமாறு அல்லது தற்போது நடைமுறையிலிருக்கும் ஜனநாயக நிறுவனங்களின் கண்ணியத்தையும் ரூபவ் நேர்மையையும் ரூபவ் நாணயத்தையும் பாதுகாக்குமாறும் பாரதிய ஜனதாவை வலியுறுத்துவது அதன் அடிப்படை நம்பிக்கைகளை கைவிடுமாறு கேட்பதற்குச் சமமானதாகும். உலகில் ஒரு தலைமைத்துவ நாடாக வருவதற்கு இந்தியா தொரடந்து முன்னெடுக்கின்ற பயணத்திற்கு நாட்டில் சகல பிரஜைகளினதும் நம்பிக்கையை வென்றெடுப்பது மோடியைப் பொறுத்தவரை ஒரு அவசியமான முன்தேவையாகும். ரூசூ39;எல்லோருடனும் எல்லோருக்காவும் அபிவிருத்தி என்று பாரதிய ஜனதா அளித்த உறுதிமொழிக்கேற்ப செயற்பட வேண்டுமென்று அரசாங்கத்தையும் பிரதமரையும் கேட்பது அவசியமாகும்.

அது நியாயமான கோரிக்கையுமாகும். எல்லோருக்குமான அபிவிருத்தி என்ற தத்துவம் நாட்டு சனத்தொகையின் விளிம்புநிலையிலுள்ள பிரிவினரின் அன்றாட வாழ்க்கையில் உணரப்படக்கூடியதாக இருக்க வேண்டும். தனது மந்திரம் அர்த்தமுள்ளதாக வேண்டுமானால் மோடி மூன்றாவது ஒரு தத்துவக்கூறையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

கர்வத்தனமான பெருமையினாலும், வெறுப்பு நிறைந்த தப்பபிப்பிராயங்களாலும் பாழ்பட்டு நின்ற மோடியின் முதலாவது பதவிக்காலத்தில் நடந்து கொண்டதைக் காட்டிலும் இரண்டாவது பதவிக்காலம் கூடுதலான அளவிற்கு சகலரையும் அரவணைக்கும் போக்கில் நாட்டம் காட்டுமென்று இந்து எதிர்பார்க்கின்றது. அவருக்கும் அவரது கட்சிக்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04