2014 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி இலங்கை பல்கலைக்கழகங்களில்  மருத்துவம், பொறியியல், கணினி, விஞ்ஞானம் ஆகிய துறைகளுக்கு தெரிவான வருவாய் குன்றிய மாணவர்களிடமிருந்து அல்-ஆகில் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த தகைமைகளைக் கொண்ட மாணவர்கள் எழுத்துமூல வேண்டுகோள், பல்கலைக்கழக மாணவ தகைமையை உறுதிப்படுத்தும்  ஆவணத்தின் போட்டோ பிரதி மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி என்பவற்றை இணைத்து 2016 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் அல் ஆகில் புலமைப்பரிசில் நிதியம், 23/3, மார்க்கட் வீதி, தர்கா நகர் 12090 எனும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும்.  பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் நிதியத்தினால் ஏற்கப்படும் கடைசி திகதி 2016 ஏப்ரல் 12 ஆகும்.