''மக்களையும் கட்சியையும் ஒரே கொள்கையுடன் வளர்ப்பவர்களே எமக்குத் தேவை''

Published By: Daya

24 May, 2019 | 12:33 PM
image

(எம்.நியூட்டன்)

மக்களையும் கட்சியையும் ஒரே கொள்கையுடன் வளர்ப்பவர்களே எமக்குத் தேவை தனி மனிதனை வளர்ப்பவர்கள் எமது கட்சிக்குத் தேவையில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்டக் கிளையின் தலைவர் பொ.கனகசபாபதி தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொல்புரம் மூலக்கிளையின் தெரிவுநேற்று முன்தினம் மாலை கட்சியின் நிர்வாகச் செயலாளர் கே.எஸ் குலநாயகம் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியானது தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்டு ஒரு கொள்கையின் கீழ் செயற்பட்டு வந்தது. பல வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இந்தக் கட்சியானது தற்போதைய நிலையில் திசை மாறிச் செல்வதுபோன்ற எண்ணப்பாடு மக்கள்மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையை அவ்வாறே கொண்டு செல்லமுடியாது கட்சியினால் ஒன்றிணைக்கப்பட்ட நாங்கள் அனைவரும் ஒரணியில் திரளவேண்டும் கட்சிக்கு என்று வருபவர்கள் எமது மக்களையும் கட்சியையும் வளர்ப்பதற்கு கொள்கையின்பால் செயற்படவேண்டும்.

தற்போது தனிநபர்கள் தம்மை வளர்க்கின்ற நிலை காணப்படுகின்றது. இந்த நிலை இனிவரும் காலங்களில் இடம்பெறாது இருப்பவர்களை அப்புறப்படுத்துகின்ற நிலையில் நாங்கள் ஒன்றிணைகின்றோம் எனவே எமது கட்சியில் நம்பிக்கை வைப்பவர்கள் எங்களுடன் இணையவேண்டும்.

இன்றைய காலத்தில் கண்துடைப்பு அபிவிருத்தியில் எம்மவர்கள் செல்வது கவலைக்குரியதே எமது கட்சி எதற்ககாக உருவாக்கப்பட்டது என்ன நோக்கத்திற்காக பாடுபடுகின்றது என்பதை மறந்தவர்களாக எம்மவர்கள் செயற்படுவது வேதனைக்குரியதே எமக்கு உரிமைகளும் அபிவிருத்திகளும் தேவை அதற்காக எமது உரிமைகளை கைவிட்டவர்களாக கண்துடைப்பு அபிவிருத்தியில் ஈடுபடமுடியாது. எனவே எமது கட்சியில் இணைகின்றவர்கள் கட்சியின் கொள்கையுடன் எமது மக்களை வளர்க்கின்றவர்களே எம்முடன் இணையவேண்டும் என்றார்.

இதேவேளை தொல்புரம் மூலக்கிளையின் தலைவராக ஜெயந்தனும் செயலாளராக முருகானந்தன் மற்றும் உறுப்பினர்களாக 13 பேர் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உமா ஓயா திட்ட பணிகளின் தாமதத்தினால்...

2024-04-20 12:02:11
news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-04-20 12:04:32
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15