மீற்றர் பொருத்திய முச்சக்கர வண்டிகளை பயன்படுத்துங்கள் - யாழ். அரச அதிபர்

Published By: Daya

24 May, 2019 | 11:56 AM
image

(எம்.நியூட்டன்)

பொது மக்கள் தங்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கட்டண மீற்றர் பொருத்திய முச்சக்கர வண்டியினை பயன்படுத்துமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் பயணிகள் போக்குவரத்து .சேவையில் முச்சக்கரவண்டிகளில் கட்டண மீற்றர் பொருத்துவது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் யாழ். மாநகரசபை ,வடமாகாண போக்குவரத்து அதிகார சபை, யாழ்.மாவட்ட பொலிஸ்திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை , அளவீட்டு நியமங்கள் பணியகம் ஆகிய திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் யாழ்.மாவட்ட வர்த்தகசங்க உறுப்பினர்கள் யாழ்.மாவட்ட முச்சக்கரவண்டி மோட்டார் உரிமையாளர் சங்கம் உறுப்பினர்களும் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் தீர்மானங்கள் தொடர்பாக அரசாங்க அதிபர் தெரிவிக்கையிலேயேஇதனைத் தெரிவித்தார்.

யாழ்.மாநகரசபை பகுதியினுள் சேவையினை மேற்கொள்ளும் முச்சக்கரவண்டிகள் யாவும் யாழ்.மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்திகள் உரிமையாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். பதிவுகளை மேற்கொண்டுள்ள முச்சக்கரவண்டிகள் யாவற்றுக்கும் கட்டண மீற்றர் பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும். இந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் யாவரும் தங்களுடைய பெயர் அடையாள அட்டை இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பவற்றையும் தங்களுடைய புகைப்படத்தையும் பயணிகள் பார்க்கு வண்டியில் காட்சிப்படுத்தவேண்டும்.

கட்டண மீற்றர் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டிகள் பயணிகள் சேவையின் போதுமீற்றர் செயற்பட்டுக்கொண்டிருத்தல் வேண்டும்.

யாழ்.மாநகர சபையினால் முச்சக்கரவண்டிகளுக்கு என முச்சக்கரவண்டியின் இலக்கம் இடப்பட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் குறித்த இலக்கத்தையுடைய முச்சக்கரவண்டியே தரித்து நிற்கமுடியும். 

மேலும் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் மேற்குறித்த தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யாத முச்சக்கரவண்டிகள் தரிப்பிடத்திற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து பயணிகள் சேவையை மேற்கொள்ளுமாயின் குறித்த முச்சக்கரவண்டிகளின் சாரதிகளுக்கு பொலிஸாரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு குறித்த முச்சக்கரவண்டிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் தற்கால பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு தங்களது பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவாக மேற்குறித்த செயற்பாடுகளைப் பூர்த்தி செய்த கட்டண மீற்றர் பொருத்திய முச்சக்கரவண்டியை பொது மக்கள் கூடுதலாக பாவனைக்கு பயன்படுத்துவதனால் பொது மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46