வேலியே பயிரை மேய்ந்தது : பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமறியல்

Published By: Robert

27 Apr, 2016 | 12:12 PM
image

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா பிரதேசத்தில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரும் காத்தான்குடிப் பொலிஸாரினால் நேற்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்களில் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலும் மற்றவர் தெஹிவளை பொலிஸ் பிரிவிலும் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்கள் குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியொன்றில் ஒன்றில் ஏற்றி கர்பலா பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் நேற்று இரவு கைது செய்யப்பட்டு இன்று காலை நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானதாக கருதப்படும் இரு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய பெண், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30