4000 சிங்கள பெளத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை ; உண்மையை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க கோரிக்கை 

Published By: Digital Desk 4

23 May, 2019 | 08:22 PM
image

(ஆர்.யசிஇ எம்.ஆர்.எம்.வசீம்)

நான்காயிரம் சிங்கள பெளத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ததாக கூறும் தவ்ஹித் ஜமா-அத்தை சேர்ந்த அந்த முஸ்லிம் வைத்தியர் யார்? இந்த செய்தி உண்மையா? உண்மையென்றால் உடனடியாக பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றினை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய உடனடியாக உண்மைகளை கண்டறிந்து சபையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார். 

முதன்மை சிங்கள நாளிதழ் ஒன்றில் இன்றைய தினம் தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்ட செய்தி ஒன்று குறித்து இன்று வியாழக்கிழமை கூடிய பாராளுமன்ற அமர்வுகளின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கேள்வி எழுப்பினார். 

இதன்போது  ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக:- சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள்ள செய்தியொன்று குறித்து நான் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். இதில் சத்திர சிகிச்சை செய்யும் தவ்ஹித் ஜமா-அத்  அமைப்பை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 4 ஆயிரம் சிங்கள பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளார். 

இது குறித்து சாட்சியங்களுடன் தகவல் வெளிவந்துள்ளது. குறித்த வைத்தியரை கைதுசெய்ய தீவிர விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என குறித்த பத்திரிகை செய்தியை தலைப்புச்செய்தியாக பிரசுரித்துள்ளது. இந்த செய்தி உண்மையென்றால் இது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் காரணியாக அமையும். இதனால் ஏனைய இன மக்கள் முஸ்லிம் வைத்தியர்கள் எவரிடமும் செல்லாது தவிர்க்க வாய்ப்புகள் உள்ளது. 

அதையும் தாண்டி இது இனவாத பிரச்சினைகளை உருவாக்கும் காரணியாக அமையும். ஆகவே இந்த செய்தி குறித்து அரசாங்கம் உடனடியாக உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். குறித்த வைத்தியர் 7 ஆயிரம் சத்திர சிகிச்சைகளை செய்துள்ளார் எனவும்இ அதில் நான்காயிரம் சிகிச்சைகளில் பெளத்த சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்துள்ளார் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் என்ற வகையில் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றதா என்பதையும் கூற வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09