ரிஷாத்தை சுத்தப்படுத்தவே நம்பிக்கையில்லா பிரேரணை பிற்படுத்தப்பட்டுள்ளது  ; மஹிந்தானந்த 

Published By: Digital Desk 4

23 May, 2019 | 07:24 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை சுத்தப்படுத்தவே நம்பிக்கையில்லா பிரேரணையை ஒரு மாதகாலத்துக்கு பிற்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்துடன் அரசாங்கத்துக்கு தேவையான பிரேரணைகளை 24மணி நேரத்துக்குள் நிறைவேற்றிக்கொண்ட வரலாறு இந்த பாராளுமன்றத்துக்கு இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஒரு மாதம் வரை பிற்படுத்தி இருப்பது தெரிவுக்குழு அமைத்து ரிஷாத் பதியுதீனை சுத்தப்படுத்துவதற்காகும். இந்த பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைகளை எவ்வாறு நிறைவேற்றியது என்பது வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது. காலையில் பிரேரணையை கொண்டுவந்து பகல் வேளையில் விவாதித்து மாலையில் அதனை அனுமதித்துக்கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தையும் அமைச்சுப்பதவிகளையும் பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்தனர்.

அதனால் நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணையை பிரதமர் பிற்படுத்தி இருப்பது தெரிவுக்குழு அமைத்து ரிஷாத் பதியுதீனின் குற்றங்களை சுத்தப்படுத்தியதன் பின்னர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்காகும். ஏனெனில் ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக  அச்சுறுத்தி இருக்கின்றார். அதனால் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும் அமைச்சுக்களை பாதுகாப்பதற்குமே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10