மோடியின் வெற்றி எப்படி சாத்தியமானது?

Published By: Rajeeban

23 May, 2019 | 05:44 PM
image

அசுடோஸ்

என்டிடீவி

பிரதமர் நரேந்திரமோடி தலைமை வகிக்கும் இந்துத்துவ கொள்கையை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் புதிய கருத்துருவாக்கங்களையும் புதிய தொழில்நுட்பங்களையும்  பயன்படுத்தவேண்டிய தருணம் உருவாகியுள்ளது.

இந்த வெற்றிக்காக  மோடியை மாத்திரம் பாராட்டவேண்டும், குஜராத்தில் தான் கற்றுக்கொண்டதை அவர் தேசிய அளவில் பயன்படுத்தியுள்ளார்.

என்னை போன்ற அரசியல் ஆய்வாளர்கள் பலர் மோடியினால் மீண்டும் அந்த மாயாஜாலத்தை செய்து காண்பிக்க முடியாது என கருதினார்கள்.

ஆனால் இந்த விடயத்திலேயே மோடி மேதையாக காணப்படுகின்றார்.

நான் எப்போதும் அவர் பின்பற்றும் கொள்கைகயையும் அவரது பாணி அரசியலையும் விமர்சித்து வந்துள்ளேன்.

ஆனால் அவர் பாரம்பரிய அரசியல்வாதியில்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். 

பாஜகவின் இன்றைய வெற்றியின் கதாநாயகன் அவர் மாத்திரமே.

வேறு இரண்டு விடயங்கள் அவரிற்கு உதவியுள்ளன- ஊடகங்களும்- இயந்திரங்களுமே அவை.

இவை இரண்டும் மோடியை ஒரு புராணகதபாத்திரமாக மாற்றியிருந்தன.

டிசம்பர் 18 வரை மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வியை தழுவியவேளை அந்த கட்சி பலவீனமானதாக காணப்பட்டது.

இதனை உணர்ந்த மோடி உடனடியாக கியர்களை மாற்றி தான் தெரிவித்து வந்த கதைகளை மாற்ற தொடங்கினார்.

அவர் தனது அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து பேசமால் தேசியவாத கருத்துக்களிற்கு உயிர்கொடுத்தார்.இது அவரது திறமையான செயல்.

தேசியவாதம் என்பது அவரது ஆயுதங்களில் மிகமுக்கியமானதாக மாறியது.

மோடி குஜராத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டவேளை அவர் அரசியலிற்கு புதியவராக காணப்பட்டார்.2002 கலவரம் காரணமாகவே மோடி முதல் வெற்றியை பெற்றார் என அவரை கடுமையாக விமர்சிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அவர் குஜராத்தில் தொடர்ந்து பெற்றவெற்றிகள் மூலம் மக்களுடன் தன்னால் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்பதையும் தனது நிலைத்திருக்கும் சக்தியையும் அவர் வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் வேறு எந்த தலைவர் என்றாலும் அலட்சிய மனப்பான்மையில் சிக்குண்டிருப்பார்.

ஆனால் குஜராத் கலவரத்தை  அடிப்படையாக வைத்து தன்னை ஏனையவர்கள் சித்தரி;த்தால்  தன்னால் அதிக தூரம் செல்ல முடியாது என்பது மோடிக்கு தெரிந்திருந்தது.

ஆதனால் அவர் தனது இந்துத்துவ தோற்றத்தை குஜராத்தின் குறுந்தேசியவாதத்துடன் இணைத்தார்.மேலும் இத்துடன் அபிவிருத்தி பற்றி தனது கருத்துக்களையும் சேர்த்துக்கொண்டார்.

இனத்துவ அடையாள அரசியலை மக்களின் பொருளாதார அபிலாசைகளுடன் கலந்து எந்த அரசியல்வாதியும் இதற்கு முன்னர் பயன்படுத்தியதில்லை.

மோடியின் குஜராத் மாதிரி தேசிய அளவிற்கு வெற்றிகரகமாக மாற்றப்பட்டது.

கடந்த ஐந்து வருடங்களில் அவர் பொருளாதார விடயங்களில் தோல்வியடைந்துள்ளார், ஆனால் பொருளாதாரம் குறித்த அவரது சொல்லாடல்கள் மாறவில்லை.

எதிர்கட்சிகளும் நிபுணர்களும் பொருளாதாரம் குறித்து முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் குப்பைதொட்டியில் வீசினார்.

தனது தலைமைத்துவத்தின் கீழ் இந்திய உயர்ந்தநிலையை அடைந்துள்ளது  உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக மாறியுள்ளது என தனது கருத்தை உறுதியாக அவர் முன்வைத்தார்.

நரேந்திர மோடியின் நிலைபலவீனமானதாக காணப்பட்டவேளை பாக்கிஸ்தானின் பலகொட் மீதான தாக்குதல் அவரிற்கு கைகொடுத்தது.

இந்தியா தனது தலைமைத்துவத்தின் கீழ் மாற்றமடைந்துள்ளது பலமடைந்துள்ளது என்பதை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதில் மோடி திறமையாக செயற்பட்டார்.

பாக்கிஸ்தானியர்களை கொல்வதற்காக நாங்கள் அவர்களி;ன் வீடுகளிற்குள் நுழைந்தோம் என்பதை இந்திய வீதிகளில்  கேட்க முடிந்தது.

இந்த வீரதேசியவாதத்தை ஊடகங்களில் காணப்பட்ட அவரது நண்பர்கள் மேலும் ஊதிப்பெருப்பித்தனர்.

ஆரம்பத்திலிருந்து தொலைக்காட்சிகள் மோடியின் தேசியவாதம் குறித்து விமர்சனம் செய்யவிரும்பவில்லை. அவை அவர் சொல்வதை தெரிவிக்கும் கருவியாக மாறின.இதேபோன்ற அருவருப்பொலி சமூக ஊடகங்களிலும் ஒலித்தது.

இந்தியாவிற்கு மீண்டுமொருமுறை தேவைப்படும் தலைவர் மோடி என்பதையும் இந்தியா அவரது கரங்களில் பாதுகாப்பாக உள்ளது என்பதையும் மோடியின் இராணுவம் தீவிரமாக பிரச்சாரம் செய்தது.

எதிர்கட்சியினர் தெரிவிப்பதை தொடர்ச்சியாக நிராகரிப்பதும், ஒவ்வொரு நாளும் மோடி குறித்த மாயதோற்றத்தை உருவாக்குவதும்  பா.ஜ.கவிற்கு வலுசேர்த்தன.

இத்துடன் அமித்சாவின்  ஒழுங்கமைக்கும் திறனும் சேர்ந்துகொண்டது.

மோடி, ஊடகம் மற்றும் பாஜகவின் கட்சி இயந்திரம் ஆகிய மூன்றும் இணைந்து  இந்திய தேர்தல் நடைமுறைகளிற்கு மறுவடிவத்தை கொடுத்துள்ளன.

இந்த கூட்டு ஜாதியின்அடையாள அரசியலையும்  உள்வாங்கியிருந்தது.

காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி நேரு காலத்தில்  பெற்ற நிலையில் இந்துத்துவா பாஜகவை அமர்த்தியுள்ளதா என்பதே இன்றைய முக்கியமான கேள்வி?

சில உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மோடியின் இந்துத்துவா என்பதே இந்தியாவின் புதிய மேலாதிக்க சிந்தனை   .இதனை தோற்கடிப்பதுஎன்பது  எந்த அரசியல் கருத்தியல் உருவாக்கத்திற்கும்  இலகுவான விடயமாகயிருக்கப்போவதில்லை.

பாஜகவின் பாரிய தேர்தல் இயந்திரத்திற்கு எதிராக போரிடுவதற்கு எதிர்கட்சிகள் அதற்கு சமமான திறமையான இயந்திரத்தை கண்டுபிடிக்கவேண்டும்.

மோடி வெற்றிக்காக போரிடுகின்றார். ராகுல்காந்தி குறித்தும் ஏனையவர்கள் குறித்தும் அவ்வாறு சொல்ல முடியாது.

மோதலில் வெற்றிபெற்ற பின்னர் மோடி ஓய்வெடுப்பதில்லை.அவர் உடனடியாக அடுத்ததிற்கு செல்கின்றார்.

மோடியை பொருத்தவரையிலும் அரசியல் என்பது நித்திய போர்.

அரசியல் எதிரிகள் மோடியை பொருத்தவரை எப்பாடுபட்டாவது அழிக்கப்படவேண்டிய நித்திய எதிரிகள்.

தமிழில் - ரஜீபன்

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13