தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே பள்ளிவாசல்களில் வாள் உள்ளது – அதாவுல்லாஹ்

Published By: Daya

23 May, 2019 | 01:07 PM
image

பள்ளிவாசல்களின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவே அங்கு வாள் உள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலக வேண்டுமென்றும் சமூகத்திற்கு உபயோகமில்லாத அமைச்சுப் பதவியை துறக்க மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 நேற்று புதன்கிழமை அக்கரைப்பற்று மாநகர சபை ஹல்லாஜ் வள நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தற்போதைய சூழ்நிலையில் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அளுத்கம முஸ்லிம்கள் மீது வன்முறை நடத்தப்பட்டபோது அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறோம் ஆட்சியை மாற்றப் போகிறோம் என்று முஸ்லிம் தலைவர்கள் கூறியதோடு அடுத்த தேர்தலில் வாக்குகளையும் பெற்றுக்கொண்டார்கள்.

ஆனால் இப்போது அந்த முஸ்லிம் தலைவர்கள் பூனையை விடவும் மோசமாக உள்ளார்கள். இருந்த உரிமைகளை விடவும் மேலதிகமான உரிமைகளை முஸ்லிம் மக்களுக்குப் பெற்றுத் தருவதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் இப்போது முஸ்லிம்களுக்கு இருந்த மத உரிமைகளையும் இல்லாமலாக்கி விட்டார்கள்.

பள்ளிவாசல்களில் வாள்கள் எதற்காக இருக்கிறது என்றால் சரியாக பதிலளிக்க முடியாமல் திணறுகிறார்கள். புல்வெட்டுவதற்கு என்கிறார்கள். அவர்களால் தைரியமாக அதற்கு பதிலளிக்க முடியாது. என்னால் மட்டுமே இவர்களுக்கு தைரியமாக பதிலளிக்க முடியும்.

பிரதமர் ரணிலுடன் இணைந்து அழுத்கம முதல் திகன, அம்பாறை வரை பள்ளிவாசல்களை உடைத்து, அங்கு தொழுத மக்களை கஷ்ட்டப்படுத்தினீர்களே அப்போது எங்களை தற்பாதுகாத்துக்கொள்ள வாளை தவிர என்ன எங்களிடம் இருக்கிறது என கேட்கிறேன்?

இப்படி தைரியமாக கேட்க எந்த தலைவனுக்கும் தைரியமில்லை. அவர்களின் அட்டூழியங்களை நாங்கள் எதிர்கொள்ள வாளுமில்லாமல் எப்படி இருக்கமுடியும்? எங்களிடம் வெடிபொருள் இருந்தால் சொல்லுங்கள். மக்கள் நாங்கள் இஸ்லாத்திலா இருக்கிறோம் என சந்தேகிக்கும் அளவுக்கு அஞ்சி ஒடுங்கிப்போயுள்ளனர்.

மேலும் மற்றுமொருவர் இருக்கிறார் அவருடைய சொத்துகுவிப்பு, கடத்தல், மற்றும் வேறு பல விடயங்கள் இருக்கிறது அதை சர்வதேசமே நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. அவருடைய அமைச்சு முஸ்லிம் சமூகத்துக்கு தேவையான அமைச்சா? அது அரசியல் அனாதைகளுக்கு தவிசாளர் பதவி கொடுப்பதற்கும் வியாபாரம் செய்வதற்குமான அமைச்சு. எனவே அவ்வாறு முஸ்லிம் மக்களுக்கு பயன்படாத அமைச்சு பதவியை ரிஷாட் பதியுதீன் துறக்க வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10