இலகு சுகாதார சேவைக்காக குடும்ப வைத்­தியர் முறை விரைவில்..: ஜெனீவா மாநாட்டில் அமைச்சர் ராஜித

Published By: J.G.Stephan

23 May, 2019 | 12:14 PM
image

எமது நாட்டில் வாழும் அனைத்து மக்­களும் இல­கு­வாக சுகா­தார சேவையைப் செல­வின்றிப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சுகா­தார அமைச்சு குடும்ப வைத்­தியர் முறையை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தாக சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்­தன தெரி­வித்­துள்ளார்.

ஜெனீவா நகரில் நேற்­று­ முன்­தினம்  முதல் ஆரம்­ப­மாகி நடந்­து­வரும் உலக சுகா­தார மா­நாட்டில்  அமைச்சர் டாக்­டர் ராஜித சேனா­ரத்ன  உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.



மேலும் அவர் கூறியதாவது, 

இலங்­கையில் தொற்­றா­நோய்­களை ஆரம்­பத்­தி­லேயே இனங் காண்­ப­தற்கும் அவை ஏற்­ப­டாது தடுப்­ப­தற்கும் என நாட­ளா­விய ரீதியில் 846 ஆரோக்­கிய வாழ்வு நிலை­யங்கள் மற்றும் 906 சுக­வ­னி­தையர் சாலைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.  புகை­யி­லைக்கு விதிக்­கப்­பட்­டுள்ள 90 வீத வரி மற்றும் விற்­பனை சந்­தைப்­ப­டுத்­துதல் ஆகி­ய­வற்றில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கடு­மை­யான விதிகள் கார­ண­மாக தற்­போது 13 வீத­மாக உள்ள புகை பிடிப்போர் எண்­ணிக்கை எதிர்­கா­லத்தில் மேலும் குறையும். 

மேலும் உணவு மற்றும் பானங்­களில் கலந்­துள்ள சீனி, உப்பு மற்றும் திரி­ப­டைந்த கொழுப்பு ஆகி­யவற்றின் அள­வு­களை காட்­டு­வ­தற்கு தற்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிறக்­கு­றி­யீட்டு முறை குறித்தும் அமைச்சர் விளக்­கினார். 

சிறு­நீ­ரக நோயா­ளர்­க­ளது நன்மை கருதி அந்த நோய்த்­தாக்கம் அதி­க­முள்ள பிர­தே­சங்­களில் தற்­போது செயற்­பட்­டு­வரும் 600 குருதிச் சுத்­தி­க­ரிப்பு உப­க­ர­ணங்­களின் எண்­ணிக்­கை­யினை இவ்­வ­ருட இறு­திக்குள் 900 ஆக அதி­க­ரிக்க உள்­ள­தாகத் தெரி­வித்த அமைச்சர் புதி­தாக செயற்­பட ஆரம்­பித்­துள்ள மூன்று புதிய மருத்­துவ பீடங்கள் மற்றும் 2000 தாதி­யர்­களை பயிற்­று­விக்­க­வல்ல புதிய தாதிய பீடம் ஆகியவற்றின் மூலம் நாட்டில் நிலவும் மருத்துவ ஆளணிப் பற்றாக்குறையை எதிர்காலத்தில் இல்லாது ஒழிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டியு்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் இடம்பெற்றால்தான் பொருளாதார...

2024-03-29 15:38:29
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37