ரிஷாத் விவகாரத்தால் சபையில் பெரும் சர்ச்சை

Published By: Vishnu

23 May, 2019 | 09:45 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை உட­ன­டி­யாக விவா­தத்­திற்கு எடுத்­துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்­கை­யுடன் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர் கள் நேற்று  சபையில் வாதிட்­ட­போது  அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது, தெரி­வுக்­கு­ழுவே தீர்வு என்று  ஆளும் தரப்பு வாதிட்ட நிலையில்  சபையில் சர்ச்சை ஏற்­பட்­டது. 

இதன்­போது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­திய எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் சபா­பீடம் முன்­பாக குவிந்­த­துடன் சபை  நட­வ­டிக்­கை­களை தடுத்­தனர்.  இத­னை­ய­டுத்து பிற்­பகல் 3 மணிக்கே சபை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. 

பாரா­ளு­மன்றம் நேற்று பிற்­பகல் 1 மணிக்கு சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில்  கூடிய வேளையில் வாய்­மூல வினா­விற்­கான விடை நேரம் முடிந்த பின்னர் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் விவ­காரம் சபையில் பூதா­க­ர­மாக்­கப்­பட்­டது. 

ஆளும் எதிர்க்­கட்சி உறுப்­பினர் வாக்­கு­வாதம் 

இதன்­போது ஒழுங்­குப்­பி­ரச்­சினை எழுப்­பிய எதிர்க்­கட்சி உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன :- பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் 60 துக்கும் அதி­க­மா­ன­வர்கள் கையொப்­ப­மிட்டு அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்­றினை கொண்­டு­வந்து சபா­ந­யா­க­ரிடம் கைய­ளித்­துள்ளோம். அதனை சபா­நா­யகர் ஏற்­றுக்­கொண்­டீர்கள்.  இது சாதா­ர­ண­மாக  முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டு அல்ல.  மிகவும் பார­தூ­ர­மான விவ­கா­ர­மான பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் கூடிய ஒன்­றாகும், இதனை நீங்கள் ஏற்­க­னவே ஏற்­றுக்­கொண்­டுள்­ளீர்கள். இது குறித்து பாரா­ளு­மன்றம் தீர்­மானம் ஒன்­றினை எடுக்க வேண்டும். அதனை நாம் செய்­யாது போனால் நாம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருப்­பதில் அர்த்தம் இல்லை. இந்த விட­யத்தில் சபை முதல்வர் தடுக்க முடி­யாது. முழு­மை­யான அதி­காரம் சபா­ந­யாகர் உங்­க­ளிடம் மட்­டுமே உள்­ளது. ஆகவே இந்த பிரே­ர­ணையை விவா­திக்க வேண்டும். அந்த  உரிமை சபைக்கு உண்டு. ஆக­வேதான் நாம் கட்சி தலைவர் கூட்­டத்­திலும் இதனை தெரி­வித்தோம்.  இதனை தடுக்கும் விதத்தில் நடந்­து­கொண்டால்  அது ஜன­நா­ய­கத்­திற்கு பாரிய அடி­யாக விழும். தெரி­வுக்­குழு அமைத்து இந்த பிரச்­சி­னையை மூடி மறைக்க அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. இதற்கு சபா­நா­யகர் இட­ம­ளிக்­காது ஜன­நா­யக ரீதியில் செயற்­பட வேண்டும் என்றார். 

இதன்­போது பதி­ல­ளித்த  சபா­நா­யகர்   இதற்கு நான் உரிய நட­வ­டிக்கை எடுத்­துள்ளேன்.  சபா­நா­யகர் என்ற வகையில் எந்த செயற்­பா­டு­க­ளையும் நான்  தடுக்­க­வில்லை. சபை முதல்வர் இதற்­கான திக­தியை  வழங்க வேண்டும். இதில் என்னால் தலை­யிட முடி­யாது என்றார். 

சபை முதல்வர்:- எதிர்க்­கட்சி கொடுத்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் 2018 ஆம் ஆண்டு என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதனை எவரும் மறுக்க முடி­யாது. ஆகவே அர­சாங்கம் இதனை ஏற்­று­கொள்­ள­வில்லை என்றார். 

பந்­துல  குண­வர்த்­தன எம்.பி:- இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை பாரா­ளு­மன்ற ஒழுங்­குப்­பத்­தி­ரத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே சபா­நா­யகர் தான் இதனை அங்­கீ­க­ரிக்க வேண்டும். அன்று ஜே.வி.பி கொண்­டு­வந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை நீங்கள் அப்­போதே ஏற்று வாக்­க­ளிப்­பிற்கு இட­ம­ளித்­ததை போல இதற்கும் இட­ம­ளிக்க வேண்டும் என்று குறிப்­பிட்டார். 

விமல் வீர­வன்ச :- நாட்டு மக்­களே எதிர்­பார்க்கும் ஒரு விடயம் குறித்தே இன்று பேசு­கின்றோம். நாடே நாச­மா­கி­யுள்­ளது. அது­மட்டும் அல்ல, அமைச்சர் ரிஷாத் குறித்து முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்டு பார­தூ­ர­மா­னது. ஆகவே இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு நாள் குறிக்க வேண்டும் . அப்­படி வழங்­க­வில்லை என்றால் நாம் இதற்கு பின்னர் எந்­த­வொரு தெரி­வுக்­கு­ழு­விலும் பங்­கு­பற்ற மாட்டோம். அதே­போன்று  இதற்கு இட­ம­ளிக்­கா­விட்டால் இலட்­சக்­க­ணக்­கான மக்­களை வர­வ­ழைத்து பாரா­ளு­மன்­றத்தை சுற்­றி­வ­ளைக்க இட­ம­ளித்­து­விட வேண்டாம்  என்றார். 

இத­னை­ய­டுத்து உரை­யாற்­றிய நாமல் ராஜபக் ஷ:- 21 ஆம் திகதி தாக்­குதல் தெரிந்து அதனை தடுக்­காத நபர்­களை கண்­ட­றி­யவே தெரி­வுக்­குழு அமைக்க வேண்டும். மாறாக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஆராய தெரி­வுக்­குழு அமைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. அமைச்சர் ரிஷாத் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் விவா­திப்போம். அர­சாங்கம் காப்­பாற்ற வேண்டும் என்றால் அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கலாம். ஆனால் முதலில் விவா­தத்தை நடத்­துங்கள்  என்று குறிப்­பிட்டார்.

மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே :- ஒழுங்­குப்­பத்­தி­ரத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்ள விட­யத்தை நிரா­க­ரிக்க முடி­யாது. அமைச்சர் ரிஷாத்தின் இணைப்­பாளர், ஆலோ­சகர் மற்றும் அவ­ரது சகோ­தரர் ஒருவர் கைது­செய்­யப்­பட்­டுள்ளார். அது­மட்டும் அல்ல கைது செய்­யப்­பட்ட நபர்­களை விடு­தலை செய்ய அழுத்தம் கொடுத்தார் என இரா­ணுவ தள­பதி கூறி­யுள்ளார். இதை­விட வேறு என்ன காரணம் தேவை, இது முழு முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக முன்­வைத்த பிரே­ரணை அல்ல. இது ஒரு குற்­ற­வா­ளிக்கு எதி­ராக கொண்­டு­வந்­துள்ள பிரே­ர­ணை­யாகும். ஆகவே இதனை தடுக்க சபை முதல்­வ­ருக்கு உரிமை இல்லை. முதலில் இவர்கள் குறித்த பொலிஸ்மா அதி­பரின் அறிக்­கையை பெற்று ஆராய வேண்டும்  என்றார். 

சபைக்குள் நுழைந்த அமைச்சர் ரிஷாத் 

இந்த நிலையில்  சபைக்குள் வந்த அமைச்சர் ரிஷாத் ஒழுங்­குப்­பி­ரச்­சினை எழுப்பி மஹிந்­தா­னந்த எம்.பியின் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பதில் கொடுக்க ஆரம்­பித்தார்.

ரிஷாத்தை அமை­திப்­ப­டுத்­திய பிர­தமர் 

இதன்­போது ஆக்­ரோ­ஷ­மாக உரை­யாற்ற ஆரம்­பித்த அமைச்சர் ரிஷாத்­திடம் ஓடி­வந்த பிர­தமர் ரணில் அவரை அமை­தி­யாக இருக்­கும்­படி ஆசு­வா­சப்­ப­டுத்தி ஆச­னத்தை விட்டு நகர்ந்தார். அதன்­பின்னர் அமை­தி­ய­டைந்தார் அமைச்சர் ரிஷாத். 

இதன்­போது ஒழுங்­குப்­பி­ரச்­சினை எழுப்­பிய  சுசில் எம்.பி  :- தெரி­வுக்­குழு அமைத்து பிரச்­சி­னையை மூடி மறைக்க அர­சாங்கம் முயட்­சிக்­கின்­றது. ஏற்­க­னவே மத்­தி­ய­வங்கி ஊழல் விட­யத்தில் அர­சாங்கம் செய்த சதித்­திட்டம் நன்­றா­கவே தெரியும். ஆகவே இப்­போதும் அதற்கு இட­ம­ளிக்­க­கூ­டாது 

இந்த சந்­தர்ப்­பத்தில் உரை­யாற்­றிய  ஆசு மார­சிங்க:- தெரி­வுக்­குழு அமைப்போம் என்­ற­போது எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் இணக்கம் தெரி­வித்­தனர். 21 ஆம் திக­தியின் பின்­ன­ரான சகல விட­யங்கள் குறித்தும் ஆரா­யவே இந்த தெரி­வுக்­குழு அமைத்தோம். இதில் அமைச்­சர்கள் குறித்தும் ஆரா­யலாம். உண்­மை­யான குற்­ற­வா­ளி­களை கண்­ட­றிய வேண்டும் என்றே முழு நாடும் நினைக்­கின்­றது. ஆகவே தெரி­வுக்­குழு அவ­சியம். அதன் மூல­மா­கவே உண்­மை­களை கண்­ட­றிய முடியும். அமைச்சர் ரிஷாத் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்­துமே பொய்­யா­ன­வை­யாகும். ஆகவே  அதனை நிரு­பிக்­கவும் தெரி­வுக்­குழு அவ­சியம் . நான் இரா­ணுவ தள­ப­தியை தொடர்­பு­கொண்டு இது குறித்து வின­வினேன், ஆனால் அவர் ஒரு­போதும் அமைச்சர் ரிஷாத் மீது குற்றம் சுமத்­த­வில்லை. அமைச்சர் ரிஷாத் முன்­வைத்த கோரிக்கை தவ­றில்லை. அது அவ­ரது உரி­மை­யாகும். அனை­வ­ருக்கும் அந்த உரிமை உள்­ளது என்றார்.  

ரோஹித அபே­கு­ண­வர்த்த:- இந்த தாக்­கு­தலில் அர­சாங்கம் பல­வீ­ன­மாக இருந்­தது என்­பதை அர­சாங்­கமே ஏற்­றுக்­கொண்­டது. அதேபோல் ஆளு­நர்கள் இரு­வ­ருக்கு எதி­ரா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. எமக்கு அமைச்சர் குறித்தே நட­வ­டிக்கை எடுக்க முடியும். அதற்­கா­கவே அமைச்சர் ரிஷாத்­திற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்­துள்ளோம். இவ­ரது அமைச்சர் பத­வியை வைத்­து­கொண்டு தப்­பித்து வரு­கின்றார். ஆக­வேதான் அவ­ரது  அமைச்­சுப்­ப­த­வியை நீக்க வேண்டும் என்று கூறு­கின்றோம். இதில் தெரி­வுக்­குழு அமைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. இன்று ஐக்­கிய தேசிய கட்­சியே இந்த தாக்­குதல் குறித்து அதி­ருப்­தியில் உள்­ளது. அவ்­வாறு இருக்­கையில்  குற்­ற­வா­ளி­களை காப்­பற்ற வேண்டாம். கொல்­லப்­பட மக்­க­ளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடி­யாது. ஆனால் நியா­யத்தை கையாள முடியும். அதற்கு இட­ம­ளிக்க வேண்டும் என்றார். 

அனுர பிரி­ய­தர்­சன யாப்பா :- இதற்கு முன்னர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்த பொது எவரும் ஒழி­ய­வில்லை. அமைச்சர் அஷ்ரப் விட­யத்தில் மற்றும் லக்ஸ்மன் கதிர்­காமர் ஆகி­யோ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்த பொது அவர்கள் எவ்­வாறு கையாண்­டார்கள் என்ற முன்­னு­தா­ர­ணங்கள் உள்­ளன என குறிப்­பிட்டார்.  

இதன்­போது உரை­யாற்­றிய   ஜெயம்­பதி  எம்.பி :- அமைச்சர் ரிஷாத் குற்­ற­வாளி என்றால் அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் பார­தூ­ர­மா­னவை. இவை உண்மை என்றால் அமைசர் ரிஷாத் சிறையில் இருக்க வேண்டும். ஆகவே இவற்றை கண்­ட­றிய முதலில் தெரி­வுக்­கு­ழுவில் கார­ணி­களை முன்­வைக்க வேண்டும். அப்­போ­துதான் ஆராய முடியும். முதலில் தெரி­வுக்­குழு அமைத்து அதில் இடைக்­கால அறிக்கை ஒன்­றினை தயா­ரித்து ஒரு வாரத்தில் ஆரா­யலாம் என்று கூறினார். 

பத்ம உய­த­சாந்த :- இந்த நாட்டில் ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத முகாம்கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. பாரா­ளு­மன்றம் வரையில் சந்­தே­க­ந­பர்கள் உள்­ளனர். பலர் கைத்­செய்­ய­பட்­டுள்­ளனர். இது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் தீர்­மானம் எடுக்­க­வில்லை என்றால் இது என்ன பாரா­ளு­மன்றம்?  அமைச்சர் ரிஷாத் மற்றும் சிலர் மீது நேர­டி­யாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே அவர்கள் குறித்து தீர்­மானம் ஒன்று எடுக்க வேண்டும் என்றார். 

ஆளும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் சபையில் வாக்­கு­வாதம். 

ஷேஹான் சேம­சிங்க, சரத் நிசங்க, விஜ­ய­சே­கர, அனு­ருத்த ஹேரத், சமிந்த விஜ­ய­சிறி, கனக ஹேரத், மனுஷ நாண­ய­கார, நிமல் லஞ்சா, நிரோஷன் பெரேரா, ஆனந்த அளுத்­க­மகே, ரோஹித அபே­கு­ண­வர்த்­தன, நிரோஷன் பெரேரா, விஜா­லேந்­திரன் , சரல்ஸ் நிர்­ம­ல­நாதன், முஜிபூர் ரஹ்மான், அமீர் அலி , லக்ஸ்மன் யாப்பா, சாந்த பண்­டார, பிர­சன்னா ரண­வீர உள்­ளிட்ட எதிர்க்­கட்சி -ஆளும்­கட்சி உறுப்­பி­னர்கள் வாத விவா­தங்­களில் ஈடு­பட்­டனர். 

எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த தலை­யிட்டார்

இதன்­போது எழுந்த எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ இந்த பிரச்­சி­னைக்கு தீர்வு காண தெரி­வுக்­குழு அவ­சி­ய­மில்லை ஒரு பத்து நிமி­டங்­களை ஒதுக்கி கட்சி தலைவர் கூட்­டத்தை கூட்டி இதற்கு தீர்­மானம் எடுப்போம் என்றார். 

ஆளும்­த­ரப்பு பிடி­வாதம் 

 சபை முதல்வர் லக்ஸ்மன் கிரி­யெல்ல இதற்கு எதிர்ப்பை முன்­வைத்தார். கட்சி தலைவர் கூட்டம் நாளைய தினமே கூட்­டப்­படும். இன்று அதற்கு அனு­ம­திக்க முடி­யாது. மிரட்டி காரி­யத்தை சாதிக்­கப்­பார்க்க வேண்டாம். அதற்கு நாம் இட­ம­ளிக்க மாட்டோம், நீங்கள் என்ன கூறி­னாலும் இன்று கட்­சித்­த­லைவர் கூட்டம் கூடாது என்றார். 

சபா­நா­யகர் நிலைப்­பாடு 

எனினும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் தொடர்ச்­சி­யாக சபையில் கூச்­ச­லிட்டு உட­ன­டி­யாக கட்சி தலைவர் கூட்­டத்தை கூட்­ட­வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­தனர். இதன்­போது சபா­நா­யகர் நிலைப்­பாடு  என்ன என்று எதிர்க்­கட்சி தலைவர் கூறி­ய­மைக்கு, எனது தீர்­மா­னத்தில்  உறு­தி­யாக உள்ளேன்.  இந்த பிரே­ர­ணைக்கு ஏற்ப விவாதம் நடத்த  நாள் ஒன்று வழங்­கப்­பட வேண்டும். நேற்றும் இன்றும் நாளையும் நான் அதே நிலைப்­பாட்டில் தான் உள்ளேன் என்று குறிப்­பிட்டார். 

எனினும் சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்­சிகள் இதில் தீர்­மானம் எடுக்க வேண்டும் என்றார்.  சபை முதல்வர் உறு­தி­யாக நின்று இன்று கட்சி தலைவர் கூட்­டத்தை நடத்த முடி­யாது என்று குறிப்­பிட்டார். 

அதன் பின்னர் சபா­நா­ய­கரும் நாளை (இன்று ) கட்சி தலைவர் கூட்­டத்­திற்கு நேரம் கொடுப்­ப­தாக கூறியதுடன் அடுத்தகட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க அங்கீகாரம் கொடுத்தார். 

சபாபீடம் நோக்கி நிரந்த விமல் வீரவன்ச 

எனினும் இதற்கு கடுமையான எதிர்ப்பை எதிர்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்ததுடன் சபாபீடம் முன்பாக வந்து சபை நகர்வுகளை குழப்ப  நடவடிக்கை எடுத்தனர். விமல் வீரவன்ச எம்.பி   முதலில் சபாபீடம் நோக்கி விரைந்தார் , பின்னர் மஹிந்தானந்த, வாசுதேவ, தினேஷ், ஷேஹான் எம்.பிகளும் பின்வரிசை எம்.பிகளும் சபை நடுவே சபாடீடம் முன்பாக வந்து குழப்ப ஆரம்பித்தனர், இதன்போது அழுத்தம் கொடுத்து எதனையு சாதிக்க முடியாது என சபாநாயகர் குறிப்பிட்டார். மறுபக்கம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆசனகளில் இருந்து எழுந்து தமது எதிர்ப்பைவும் வெளிபடுத்திக்கொண்டிருந்தனர். 

வெளியேறிய எதிர்க்கட்சி தலைவரும் சபை ஒத்திவைப்பும் 

உடனே எதிர்க்கட்சி தலைவர் சபையை விட்டு வெளியேறினார்.  இதனை அடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குழப்பம் சபையில் அதிகரித்ததை அடுத்து சபை முதல்வர் நேற்று பிற்பகல் 3 மணிக்கு சபையை ஒத்திவைத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04