ரிஷாத், அசாத் சாலி, ஹிஸ்புல்லாவை பதவி நீக்குங்கள் ; ஜனாதிபதி செயலகத்துக்கு மகஜர்

Published By: Vishnu

22 May, 2019 | 07:32 PM
image

(எம்.மனோசித்ரா)

இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சுமத்தப்படுகின்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சுப் பதவியிலிருந்தும், எம்.எல்.ஏ.ம். ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் ஆளுனர் பதவியிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் எனக் கோரி ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. 

தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரர் இன்று இந்த மகஜரை கையளித்தார்.

இந்த பயங்கரவாத தாக்குதல்களுடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் நேரடி தொடர்புகள் இருப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச சொத்துக்களை பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு உதவி செய்துள்ளமை, தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பிற்கு நேரடியாக பங்களிப்பு வழங்கியுள்ளமை, தனது இல்லத்தில் குண்டுதாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளமை,  பயங்கவாதத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு தமது அமைச்சில் பதவிகள் வழங்கியுள்ளமை, அரச தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாகக் கூறி முஸ்லிம் மத இளைஞர்களை தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பில் இணைத்தமை மற்றும் வெடிபொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு தனது அமைச்சினூடாக அனுமதி வழங்கியுள்ளமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக  முன்வைக்கப்பட்டுள்ளன. 

இதே போன்று மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அடிப்படைவாத கருத்துக்களை வெளியிடும் ஒருவராகவும் இவர் விளங்குகின்றார். எனவே இவர் ஆளுனர் பதவியிலிருந்து உடன் நீக்கப்பட வேண்டும். இடங்களை பகிர்ந்தளிப்பதில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளார். 

கிழக்கு மாகாண ஆளுனரான ஹிஸ்புல்லா ' பட்டிக்கலோ கெம்பஸ் ' என்ற பல்கலைகழகத்தின் மூலம் இளைஞர்களுக்கு அடிப்படைவாதத்தை போதித்துள்ளதோடு, அதற்காக பாரிய தொகை பணத்தையும் செலவிட்டுள்ளார். இவ்வாறு இளம் சந்ததியினர் மத்தியில் அடிப்படைவாதத்தை தூண்டியமையால் இவரும் ஆளுனர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் அந்த மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08