உடல் வறட்சிக்குரிய நிவாரணம்

Published By: Digital Desk 4

22 May, 2019 | 05:45 PM
image

அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் பிரச்சனையின் காரணமாக கோடைகாலத்தில் தெற்காசியா முழுவதும் அதிக வெப்பநிலை நிலவுகிறது. இந்த தருணத்தில் வெளியில் பயணிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் உடல் வறட்சி என்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உடல் வறட்சி என்றால் உடலுக்குத் தேவையான, உடல் இயங்குவதற்குத் தேவையான நீர் சத்து இல்லாததால் ஏற்படும் பாதிப்பு. உடல் இயங்குவதற்கு ரத்த ஓட்டமும்,  அதன் அடிப்படையான காற்றோட்டமும் சீராக இயங்கச் செய்ய, நுரையீரல் மற்றும் இதய ஓட்டம் ஒரு ஒழுங்கு முறையில் இயங்க உடலில் நீர்சத்தானது போதுமான அளவில் இருக்க வேண்டும். இந்த நீர் சத்து குறைந்தால் ஏற்படும் பாதிப்பு தான் உடல் வறட்சி.

இதனை அலட்சியமாக புறக்கணித்தால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதற்கு தேவையான நீரை நாம் அருந்தவில்லை எனில், இந்த நீர் சத்து குறைபாடுகள் உருவாகும். அதிலும் குறிப்பாக கோடை காலங்களில் எம்முடைய உடலில் இருந்து வியர்வை வழியாக அதிக அளவு நீர் சத்து வெளியாவதால். நீர் சத்து குறைபாடு உண்டாகிறது. இந்நிலையில் நாம் இதனை உணராமல், வீட்டை விட்டு வெளியில் பயணிக்கிறோம். இந்த தருணத்தில் சன் ஸ்ட்ரோக் எனப்படும் பாதிப்பு ஏற்பட்டு, உடல் வறட்சி அதிகம் ஏற்படுகிறது. சிலர் கோடைக் காலங்களில் சாலையில் பயணிக்கும் போது, மயங்கிவிழுவதை நாம் காணலாம்.அதற்கு அவர்களின் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாதததே காரணம்.

தாகம் ஏற்படுவது தான் இதன் முதன்மையான அறிகுறி. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால் எம்மில் பலரும், குறிப்பாக குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அலுவலகத்தில் பணியாற்றும் பலரும், தாகம் எடுத்தாலும் பணிச்சுமையின் காரணமாக அல்லது பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு முக கவனத்தின் காரணமாக சரியான தருணத்தில் நிறைவான தண்ணீரை அருந்துவதில்லை. இதன் காரணமாக உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டு, உடல் வறட்சி உருவாகிறது. 

சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது தாமதம் ஏற்படலாம். வெளியேறும் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறலாம். லேசான அளவில் தலைசுற்றல். உடல் சோர்வு. மயக்கம். குழப்பம் போன்றவை இதன் அறிகுறிகள். இத்தகைய அறிகுறிகளை காணும்போது உடனடியாக எம்முடைய உடலுக்கு தேவையான தண்ணீரை பருக வேண்டும்.

12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் என்றால் அவர்களுடைய தாய்மார்கள் தங்களது பிள்ளைகளின் உதட்டை நன்கு கவனித்து உடல் வறட்சியை அவதானிக்கலாம் நீர் சத்து குறைபாடு இருந்தால் அப்பிள்ளைகளின் உதடுகள் இயல்பான தன்மையில் இல்லாததை காணலாம். முதியவர்களும் நீர் சத்துக் குறைபாட்டின் காரணமாக பாதிக்கப்படுவதுண்டு. அவர்களையும் கண்காணித்து அவர்களுக்கு தேவையான அளவு நீரை பருக செய்ய வேண்டும்.

உடல் வறட்சிக்கு முதல் மற்றும் முதன்மையான நிவாரணம் தண்ணீர் பருகுவது தான். இதனை அடுத்து குறிப்பிட்ட கால நேரங்களில் அதாவது பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை முற்றாகத் தவிர்த்து வீட்டுக்குள்ளேயே இருக்கலாம். நீர் சத்து மிக்க பானங்களை அருந்தலாம். அத்துடன் உடலுக்கு தேவையான சத்து வழங்கும் திரவ பானங்களையும் பருகலாம். இதன் மூலம் உடல் வறட்சி ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04