பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு எச்.ஐ.வி என பரிசோதனையில் நிரூபனம்

Published By: Daya

22 May, 2019 | 04:59 PM
image

பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முதல் முதலாக கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து ஏராளமான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

இதனால் குழப்பமடைந்த வைத்தியர் இம்ரான் ஆர்பானி  குழந்தைகளின் இரத்தத்தை பரிசோதித்து பார்த்ததில் அனைவருக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்தது.

கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி வரை ஒரு சிறு பகுதியில் மாத்திரம் 15 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சிந்து மாகாணத்தில் தீவிர காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பலரிடம் மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையில் 607 பேருக்கு எச்.ஐ.வி இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். குழந்தைகளின் பெற்றோருக்கு எச்.ஐ.வி இல்லாத போது, குழந்தைகளுக்கு மாத்திரம் எவ்வாறு பரவியது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47