முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை குழப்பவே முன்னாள் போராளிகள் கடத்தப்படுகின்றனர் 

Published By: MD.Lucias

27 Apr, 2016 | 09:04 AM
image

மே 18ஆம் திகதி இடம் பெறவுள்ள முள்­ளி­வாய்க்கால் நினைவு தினத்தை குழப்­பவே முன்னாள் போரா­ளிகள் கடத்­தப்­ப­டு­வதும் விசா­ர­ணைக்கு அழைப்­பதும் இடம்­பெ­று­கின்­றது. கடந்த அர­சாங்­கத்தில் இடம்­பெற்ற நட­வ­டிக்கை போன்றே தற்­போதும் இடம்­பெற்று வரு­கின்­றது என வட­மா­காண சபை உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் போரா­ளிகள் கைது மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்­பான தென்­னி­லங்கை கருத்­துக்கள் தொடர்­பாக கேட்­ட­போது அவர் இதனைத் தெரி­வித்­தி­ருந்தார்.

குறித்த விட­யங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

படைத்­த­ரப்­பி­ன­ராலும் பொலி­ஸா­ராலும் முன்னாள் போரா­ளிகள் கைது செய்­யப்­ப­டு­வதும் சட்­ட­ரீ­தி­யாக கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு அப்பால் கடத்­தப்­பட்டு பின்னர் விசா­ர­ணைக்கு அழைத்துச் செல்­லப்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­வதும் மிகப் பெரிய அச்­சு­றுத்­த­லா­கவே பார்க்­க­மு­டியும்.

இதே­வேளை இம்­மாதம் 30ஆம் திகதி பல நூற்றுக் கணக்­கா­ன­வர்­களை கொழும்­பிற்கு வாருங்கள், விசா­ர­ணைக்கு ஆஜ­ரா­குங்கள் என அழைப்பு விடுக்­கப்­பட்­ட­மை­யா­னது எதிர்­வரும் மே 18ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள முள்­ளி­வாய்க்கால் நினைவு தினத்தை தடுக்கும் முயற்­சி­கா­கவே பார்க்­க­வேண்­டி­யுள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்கம் எனக்­கூறும் இந்த அர­சாங்கம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் செயற்­பாட்­டையே தொட­ரு­கின்­றது என்ற குற்­ற­ச்சாட்டை நாம் முன்­வைக்­கின்றோம்.

கடந்த காலங்­களில் ஒரு கோர­மு­கத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மேற்­கொண்ட விட­யங்­களை சிரித்த முகத்­துடன் தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் மேற்­கொள்­கி­றார்கள். இப்­போது அவர்கள் இறுக்­க­மான முகத்­தோடு எமது இனத்தை அழிக்க, பழி­வாங்க முற்­ப­டு­கி­றார்­களா என்ற சந்தேகம் எம்மில் எழு­கி­றது.

இதற்குப் பிர­தான விடயம் யாதெனில், அர­சியல் தீர்வு விட­யங்­களில் தமிழ் மக்கள் தமது உள்ளக் குமு­றல்­களை, வெளிப்­பா­டு­களை வெளியே சொல்ல முடி­யா­த­வாறு ஒரு அச்­ச­மான சூழலை ஏற்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு அரை­கு­றை­யான தீர்வை எங்கள் மீது திணிப்­ப­தா­கவே பார்க்­கின்றோம்.

வட­மா­காண பிரே­ரணை தொடர்பில், தீர்­வுத்­திட்டம் முன்­யோ­ச­னைகள் தொடர்பில் வட­மா­காண சபையில் முழுமை பெற­முன்­னமே தென்­னி­லங்­கையில் இருக்­கக்­கூ­டிய இன­வா­தி­க­ளி­ட­மி­ருந்து கூச்சல், குழப்­பங்கள் வெடிக்கத் தொடங்­கி­யுள்­ளது.

இதே­வேளை இரத்த ஆறு ஓடும் என்று பொது­ப­ல­சேனா, இரா­வணா பலய போன்ற அமைப்­புக்­களின் கருத்­துக்­களை நாம் முழு­மை­யான இன­வெறி கூற்­றுக்­க­ளா­கவே பார்க்­கின்றோம்.

முஸ்லிம் மக்கள் 1974ஆம் ஆண்டு புத்­த­ளத்­தி­லுள்ள பள்­ளி­வா­சலில் கொல்­லப்­பட்­ட­போது முஸ்லிம் பிர­தி­நி­திகள் எவரும் கருத்­துக்கள் முன்­வைக்­க­வில்லை. தந்தை செல்­வாவே கருத்­துக்­களை முன்­வைத்தார். அதா­வது முஸ்லிம் மக்­க­ளுக்கும் மலை­யக தமிழ் மக்­க­ளுக்கும் சுய உரி­மையை கேட்­டு­நிற்­கின்றோம். ஆகவே இலங்­கையில் இரண்டு தேசிய இனங்­கள்தான் இருந்­தது என்­பதை எங்­க­ளு­டைய தலை­வர்கள் கூறி­யுள்­ளார் கள்.

முஸ்லிம் மக்கள் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் முஸ்லிம் சுயாட்சிபிராந்தியம் அதேபோல் மலையக தமிழ் மக்களுக்கான மலையக தமிழ் சுயாட்சி சபை ஆகியவற்றை வடமாகாண சபை முன்வைத்துள்ளது. இது இன்று நேற்று அல்ல தந்தை செல்வா காலத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றேன் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36