தொழிற்சாலை ஊழியர்களுக்குப் பிணை ; பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

Published By: Digital Desk 4

22 May, 2019 | 12:14 PM
image

வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் காமினி செனரத் ஹேவாவிதாரன, உடன் அமுலுக்கு வரும் வகையில் காலி பொலிஸ் பிரிவிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையின் ஊழியர்கள் 32 பேர் விணையில் விடுதலையானமை குறித்த விசாரணைகள் தொடர்பிலேயே வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட, வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மெளலவி ஐவர் உட்பட 32 பேர் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த 32 பேரும் பிணையில் சென்றமை குறித்த விசாரணைகள் நிமித்தம் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காலி பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31