உயர் பெ­று­பே­று­களைக்கொண்­ட ­பொ­ரு­ளா­தார சமூக கருத்­திட்­டங்கள் யாழில் ஆரம்பம்

Published By: Digital Desk 3

22 May, 2019 | 10:45 AM
image

யாழ். மாவட்­டத்தில் அதி­யுயர் பெறு­பே­று­களைக் கொண்ட முன்­னு­ரிமைப்படுத்­தப்­பட்ட கருத்­திட்­டங்கள் உட­ன­டி­யாக ஆரம்­பிக்கப்பட­வுள்­ளன. இதில் குரு­நகர் மீன்­பிடித் துறை­முக நங்­கூ­ர­மிடும் தளம் அபி­வி­ருத்தி, யாழ்­.அ­ரு­ணோதயா கல்­லூரி அபி­வி­ருத்தி வேலைத்­திட்டம், தெல்­லிப்­பழை ஆதார வைத்­தி­ய­சா­லைக்­கான அவ­சர உப­க­ரண தேவை­களைப் பூர்த்­தி­ செய்யும் வேலைத்­திட்டம் மற்றும் யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற கட்­டிடத் தொகு­தி­களும் இளைஞர் ஆளுமை விருத்­திக்­கான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்களும்  உள்­ள­டங்­கு­கின்­றன என தேசிய கொள்­கைகள், பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு, வடக்கு மாகாண அபி­வி­ருத்தி மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சின் செய­லாளர் வே.சிவ­ஞா­ன­சோதி தெரி­வித்தார்.

இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

யாழ். மாவட்­டத்தின் யாழ். பிர­தே­ச­ செ­ய­லகப் பிரிவின் கீழ் அமைந்­துள்ள குரு­நகர் மீன்­பி­டித்­துறை நங்கூரத் தள­மா­னது 3,117 கடற்­றொ­ழி­லாளர் குடும்­பங்­களை உள்­ள­டக்­கிய 10,760 அங்­கத்­த­வர்­களைக் கொண்ட கடற்­றொழில் மைய­மா­கும். இதில் 90 வீத­மான மக்­களின் வாழ்­வா­தாரம் கடற்றொழிலை மைய­மாகக் கொண்­டுள்­ளது. 

வரு­டாந்த மீன்­பிடி உற்­பத்தி 7,390 மெற்றிக் தொன்னா­கவும் மேலும் 562 மெற்றிக் தொன் கரு­வாடு உற்­பத்­தி­களைக் கொண்­ட­து­மான ஒரு கடற்­றொழில் பொரு­ளா­தார வலய­மா­கவும் காணப்­ப­டு­கின்­றது.  

2000க்கும் மேற்­பட்ட ஒரு நாள் பட­கு­களும் பட­கு­களின் எண்­ணிக்­கை அதி­க­மாகக் காணப்­ப­டு­வ­துடன் 500க்கும் மேற்­பட்ட ரோலர் பட­குகள் ஆழ்­க­டலை நோக்கி மீன்­பி­டியில் ஈடு­ப­டு­வ­தா­கவும் காணப்­ப­டு­வ­துடன் இத் துறையின் அபி­வி­ருத்­திக்கு கடற்­கரை சார்ந்த மீன்­பிடித் துறைக்­கான வச­திகள் போதி­ய­ளவு காணப்­ப­டா­மையும் குறிப்­பாக ஏல­மிடும் அறை, வலை ­பின்னும் நிலையம், குளி­ரூட்டல் வச­திகள், எரி­பொருள் நிலையம், பட­ குகள்  திருத்தும் தொழிற்பட்­ட­றைகள் போன்­றவை காணப்­ப­டா­தமை இத்­து­றையின் வளர்ச்­சிக்கு பாரிய சவா­லாக அமைந்­தி­ருப்­ப­தாக குரு­நகர் பிர­தேச மீன்­பிடித் தொழிற்­சங்கங்கள் தெரி­வித்­துள்­ளன.  

இக்­க­லந்­து­ரை­யா­டலின் அடிப்­ப­டை 

யில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை அமைச்­ச­ராகக் கொண்ட தேசி­ய­ கொள்­கைகள், பொரு­ளாதார அபி­வி­ருத்தி, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு, வடக்கு மாகாண அபி­வி­ருத்தி மற்றும் இளைஞர் விவ­கா­ரங்கள் அமைச்­சி­னு­டைய முன்­னெ­டுப்பில் ஏல­மிடும் கட்­டி­டத்­தொ­குதி, எரி­பொருள் நிலையம், வலை ­பின்னும் நிலையம் உட்­பட சில உட­னடித் தேவை­களை நிறைவு செய்­வ­தற்கு உட­ன­டி­யாக 33.83மில்­லியன் ரூபா கிர­யத்தில் இக்­க­ருத்­திட்டம் அனு­ம­திக்­கப்­பட்டு அமு­லாக்­கப்­பட தீர்­மா­னிக்­கப்பட்டுள்­ளது. 

இக்­க­ருத்­திட்டம் மாவட்ட செய­லா ளர் ஊடாக யாழ். பிர­தேச செய­ல­கத்தின் மூலம் அமுல்படுத்­தப்

­ப­ட­வுள்­ளது. இக்­க­ருத்­திட்டத்தின் மூலம் குரு­நகர் கடற்றொழிலா­ளர் குடும்­பங்கள் பொரு­ளா­தார ரீதி­யாக வலுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் கடற்­றொழில் துறை­யை விருத்தி செய்­வ­தற்கு இது உதவி செய்யும். இக்­க­ருத்­திட்டம் முடி­வு­றுத்­தப்­படும் பொழுது குரு­நகர் பிர­தே­சத்திலுள்ள கடற்றொழி­லா­ளர்­க­ளுக்கு ஏலம் விடும் கட்­டிடத் தொகு­தியும் எரி­பொருள் நிலை­யமும் மீன்­ வ­லை ­பின்னும் நிலை­யமும் வெளி­யீ­டு­க­ளாகப் பெறப்­படும். இக்­க­ருத்­திட்­டத்தின் முன்­னேற்­றத்­தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இதனை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான கருத்­திட்ட வேலைத் திட்­டங்கள் மீள்­ கு­டி­யேற்ற புனர்­வாழ்­வ­ளிப்பு, வட­மா­காண அபி­வி­ருத்தி அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­படும். இக்­க­ருத்­திட்டம் குரு­நகர் வாழ் மீன்­பிடி கடற்­றொழில் குடும்­பங்­க­ளுக்கு ஓர் ஆரம்­பக் ­கட்ட கருத்­திட்ட முன்­னெ­டுப்­பாக அமையும்.

மேலும் உயர் பெறு­பே­று­களைக் கொண்ட கருத்­திட்டத்தில் யாழ். அரு­ணோ­ தயா கல்­லூரி தொடர்­பாக பல் தேவை ­களைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்­று­கூடல் மண்­டபம் மற்றும் வகுப்­ப­றை­க­ளையும் உள்­ள­டக்­கிய இரண்­டு­ மாடிக் கட்­ட­ிடத்­துக்கு 55 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு  செய்­யப்­பட்­டுள்­ளது. இக்­கல்­லூ­ரியில்  1000க்கு மேற்­பட்ட மாண­வர்கள் கல்­வி­ கற்று வரு­வ­துடன் வரு­டாந்தம் 50க்கும் மேற்­பட்ட மாண­வர்கள் மருத்­து­வத்­துறை, பொறி­யி­யல்­துறை, வர்த்­த­கத்­துறை மற்றும் கலைத்­துறை போன்ற பல்­க­லைக்­க­ழக அனு­ம­தியைப் பெற்றுக் கொள்­கின்­றார் கள். அத்­துடன் க.பொ.த. சாதா­ரண தர பரீட்­சையில் 80 வீதத்­துக்கும் அதி­கமான மாண­வர்கள் சித்தியடையும் வீதத்­தைப் பெற்று மாகாண, தேசிய மட்­டத்தில் சாத­னை­களைப் படைக்­கின்­றனர்.

பாட­சாலை நிகழ்­வுகளை மாலை நேரங்­களில் திறந்­த­வெளி அரங்கில் நடத்­து­வ­தனால் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்கும் மாண­வர்­க­ளுக்கு இக் கட்­டி­ட­மா­னது அவர்­களின் திற­மை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு வச­திப்­ப­டுத்­த­லாக அமையும் என பாட­சாலை ஆசி­ரி­யர்­களும் நலன்­வி­ரும்­பி­களும் விரும்­பு­கின்­றனர். 

உயர் விளை­ திறன் கொண்ட கருத்­திட்­டங்­களில் தெல்­லிப்­பழை பிர­தேச செய­ல­கத்தில் அமைந்­துள்ள தெல்­லிப்­பழை ஆதார வைத்­தி­ய­சா­லையை மேம்­ப­டுத்தும் வேலைத் திட்­டத்­திற்கு 56 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.  இதில் வைத்­திய உப­க­ர­ணங்­க­ளுக்கும், சத்­தி­ர­சி­கிச்சைப் பிரி­வு­ மற்றும் நோயியல் ஆய்­வு­கூட புன­ர­மைப்பு, குழந்தை பிர­ச­விப்புப் பகு­திக்­கான வச­தி­களும் விரி­வாக்­கல்­களும் சாப்­பாட்டு அறை அமைத்தல் மற்றும் நோயாளர் பிரிவு, மகப்­பேற்றுப் பிரிவு, பெண் நோயியல் பிரிவு உட்­பட அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளுக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

யாழ்.மாவட்ட இளைஞர் ஆளுமை விருத்­திக்­கான கட்­டிடத் தொகுதிகளும் வசதிகளுக்குமான வேலைத் திட்டத்துக்க ரூபா 50 மில்லியன் நிதி தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் கீழ் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் இதில் தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கான மாவட்ட அலுவலகம், இளைஞர் பயிற்சி நிலையம், இளைஞர் விளையாட்டுத் திடல், இளைஞர்களுக்கான உள்ளக பயிற்சி வசதிகள், இளைஞர் கலாசார மண்டபம் உள்ளடங்கலாக 11,000 இளைஞர்களுக்கு வசதிப்படுத்தும் வேலைத்திட்டமாக இது அமைவது குறிப்பிடத்தக்கது. 

யாழ். மாவட்ட இந்த  இளைஞர் ஆளுமை அபிவிருத்திக்கான கட்டிடத் தொகுதியானது சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் அமையவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57