ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது இராணுவம் அதிரடி தாக்குதல் - 25 பேர் பலி

Published By: Daya

22 May, 2019 | 10:18 AM
image

அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு வொஷிங்டன் பென்டகன் இராணுவ தலைமையகம் மற்றும் நியூயோர்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது அல்-கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை நடத்தினர். 3 ஆயிரம் அப்பாவி மக்கள் குறித்த தாக்குதலில் உயிரிழந்தமை உலக வரலாற்றில் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது.

குறித்த தாக்குதல்களை நடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சி நடத்தி வந்த தலீபான்களை அப்புறப்படுத்தியது. மக்களாட்சியை கொண்டுவந்தது. ஆனாலும் 18 ஆண்டுகளாக போராடியும் தலீபான் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இன்னும் அங்கு தலீபான்கள் பதுங்கி இருந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஆங்காங்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த நிலையில் தலீபான், ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கையை இராணுவம் முடுக்கிவிட்டுள்ளது. அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

காந்தஹார் மாகாணத்தில் ஷாவாலி கோட் மாவட்டத்தின் கரீ பகுதியில் பதுங்கி இருந்த தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து இராணுவம் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 தலீபான் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பயங்கரவாதிகளின் வாகனங்கள் அழிக்கப்பட்டன.

குறித்த தாக்குதலை தொடர்ந்து காந்தஹாரில் தலீபான்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

குண்டூஸ் மாகாணத்தின் கான் அபாத் மற்றும் அதையொட்டிய அக்டாஷ் மாவட்டங்களில் பதுங்கி இருந்த தலீபான் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு இராணுவம் நேற்று அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

12-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் இராணுவ தரப்பில் எந்தவொரு சேதமும் இல்லை என தகவல்கள் கூறுகின்றன.

நங்கர்ஹார் மாகாணத்தின் சபார்ஹர் மாவட்டத்தில் மலைப்பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு இராணுவம் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 4 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஓட்டம் எடுத்து விட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் தலீபான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10