“நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்தாலும் அவர்களின் பிறப்புச் சான்றிதழ்களை யாழில் பெற்றுக்கொள்ள முடியும்”

Published By: Digital Desk 4

21 May, 2019 | 10:10 PM
image

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

அத்துடன், விவாகப் பதிவு மற்றும் இறப்புப் பதிவுச் சான்றிதழை இதேபோன்று யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ். பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் அலுவலகத்தை இன்று (21) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“முன்னைய காலங்களில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் பெறும் நடவடிக்கைகள் யாழ்.மாவட்ட செயலகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தன. படிப்படியாக அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன் பின்னர் பிரதேச செயலகங்களுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அதன்படி அவர்கள் அந்தந்த பிரதேச செயலக பிரிவுகளில் பிறந்தவர்கள் அந்தந்தப் பிரதேச செயலகங்களில் பிறப்பு பதிவுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்பின்னர், யாழ்.மாவட்டத்திலுள்ள எந்தெந்தப் பிரதேச செயலகத்தில் பிறந்தவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களையும் பெறக்கூடியதாக வசதிகள் செய்யப்பட்டன.

வடமாகாணத்தில் பிறந்தவர்கள் வடக்கில் எந்தப் பிரதேச செயலகத்திலும் பெறக்கூடிய ஏற்பாடுகள் முன்னரே இருந்திருந்தாலும், தற்போது, அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன் அடிப்படையில், நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், யாழ்.மாவட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த செயற்திட்டம் எமது மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது” என்று யாழ்ப்பாணம் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10