கடலுக்கு கீழான படுக்கையறைகளுடன் மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள்

Published By: Raam

27 Apr, 2016 | 08:34 AM
image

டுபாய் கடற்­க­ரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்­ல­மாக அழைக்­கப்­படும் கட­லுக்கு கீழாக அமைந்த படுக்­கை­ய­றை­களைக் கொண்ட மிதக்கும் விடு­முறை வாசஸ்­த­லங்கள் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விப்புச் செய்­யப்­பட்­டுள்­ளது.

கடல் வாழ் உயி­ரி­னங்­களை நேருக்கு நேர் கண்டு களித்­த­வாறு பொழுதைக் கழிக்­கவும் உறங்­கவும் உதவும் இந்த விடு­முறை வாசஸ்­த­லங்கள் டுபாய் கடற்­க­ரை­யி­லி­ருந்து 2.5 மைல் தொலைவில் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்த விடு­மு­றை­ வா­சஸ்­த­லங்கள் ஒவ்­வொன்­றையும் ஸ்தாபிக்க தலா ஒரு மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான பணம் செல­வாகும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மேற்­படி விடு­முறை வாசஸ்­த­லங்­களை ஸ்தம்பிக்கும் பணி 2018 ஆம் ஆண்­டுக்குள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதன் பிர­காரம் முதலாவதாக 4,000 சதுர அடி அளவான விடுமுறை வாசஸ்தலம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right