சிறுபான்மை மக்களின் முழு ஆதரவும் அரசாங்கத்துக்கே கிடைக்கும் ; பி. ஹரிசன் 

Published By: Digital Desk 4

21 May, 2019 | 02:34 PM
image

(நா.தினுஷா)

வன்முறைகளைத் தூண்டி சிறுபான்மை மக்களை கொடுமைப்படுத்தி தமது தனிப்பட்ட எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள எதிரணியினர் எடுக்கும் முயற்சிகள் வெறுக்கத்தக்கவை. அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றி;கொள்ள எதிர்பார்ப்பார்களாக இருந்தால் அவர்களது நோக்கம் நிறைவேறப் போவதில்லை என அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். 

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலநதுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியதாவது;

சிறு;பான்மை மக்களின் முழு ஆதரவும் அரசாங்கத்தரப்புக்கே கிடைக்கும். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஆனால் நாட்டில் வன்முறைகளைத் தூண்டி சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி தனிப்பட்ட எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக்கொள்ளவே எதிரணியினர் முயற்சிக்கின்றனர். இதனூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்வது அவர்களின் நோக்கமாக இருந்தால் அது கனவாகவே அமையும்.    

ஐ.தே.க என்பது சகல சமூக மக்களுக்கும் ஏற்புடைய வகையில் கட்டியெழுப்பப்பட்டதாகும். ஆகவே தேவையான பலத்தை ஒன்றிணைந்து பெற்றுக்கொள்ள முடியும் என்ற எதிர்ப்பார்ப்பும் எமக்கு உள்ளது. 

அதேபோன்று நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அரசாங்கத்துக்கு எதிராக திசைத்திருப்பவே எதிரணியினர் முயற்சிக்கின்றனர். குறித்த வன்முறைகள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் எதிர்வரும் ஒருசில தினங்களில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது வெளியாகும், என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54