'இனி­மேலும் வன்­முறை வேண்டாம்' : நீர்­கொ­ழும்பில் பல இடங்­க­ளிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

Published By: J.G.Stephan

21 May, 2019 | 12:26 PM
image

'இனி­மேலும் வன்­முறை வேண்டாம்' என்ற தலைப்பில் நீர்­கொ­ழும்பில் பல இடங்­க­ளிலும் சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டுள்­ளன.

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நீர்­கொ­ழும்பு கட்­டு­வ­பிட்­டிய தேவா­லயம் உட்­பட பல தேவா­ல­யங்­க­ளிலும் நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து நீர்­கொ­ழும்பு நகர மக்­களின் இயல்பு வாழ்க்கை முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டது. இந்த சம்­ப­வத்தில்  நீர்­கொ­ழும்பில் 100 இற்கும் மேற்­பட்டோர் கொல்­லப்­பட்­டனர். 200 பேர் வரை காய­ம­டைந்­தனர். நகரம் சோகத்­திலும் அச்­சத்­திலும் மூழ்­கி­யது.

இரண்டு வாரங்கள் கழித்து கடந்த 05 ஆம் திகதி  நீர்­கொ­ழும்பு போர­தொட்ட பிர­தே­சத்தில்  இரு தரப்­பி­ன­ரி­டையே ஏற்­பட்ட பிரச்­சி­னையை தொடர்ந்து  அங்கு பதற்ற நிலை தோன்­றி­யது. இதனைத் தொடர்ந்து  ஊர­டங்கு சட்டம் பிறப்­பிக்­கப்­பட்ட இரவு வேளையில், பெரி­ய­முல்லை பிர­தே­சத்தில் சில இடங்­களில் வன்­செ­யல்கள் இடம்­பெற்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வீடுகள் தாக்­கப்­பட்­டன. சொத்­துக்­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. நகை மற்றும் பணம் கொள்­ளை­யி­டப்­பட்­டன. வாக­னங்கள் பல­வற்­றுக்கு சேதம் விளை­விக்­கப்­பட்­ட­துடன் மோட்டார் சைக்­கிள்கள் சில தீவைக்­கப்­பட்­டன. மக்கள் இயல்பு வாழ்க்கை முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் தற்­போது நகரில் பல இடங்­களில் சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டுள்­ளன.

நீர்­கொ­ழும்பு பிர­ஜைகள் ஒன்­றியம், நீர்­கொ­ழும்பு பிர­தேச சர்வ மத குழு ஆகி­யன தனித்­த­னி­யாக மூன்று மொழி­க­ளிலும் சுவ­ரொட்­டி­களை ஒட்­டி­யுள்­ளன. நீர்­கொ­ழும்பு பிர­ஜைகள் ஒன்­றியம் நகரில் பல இடங்­க­ளிலும் ஒட்­டி­யுள்ள சுவ­ரொட்­டியில், 

'இனி­மேலும் வன்­முறை வேண்டாம், தேசிய அனர்த்­தத்­தின்­போது நீர்­கொ­ழும்பு மக்­க­ளா­கிய நாம் காட்­டிய முன்­மா­தி­ரியை தொடர்ந்து முன்­னெ­டுப்போம்' என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நீர்­கொ­ழும்பு பிரதேச சர்வமத குழு ஒட்டியுள்ள சுவரொட்டியில்,

'வன்முறை வேண்டாம், இலங்கையின் ஒரு இனமாக மீண்டும் கட்டியெழுப்புவோம்' என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நகரில் அமைதி நிலவுகிறது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22