உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி

Published By: Daya

21 May, 2019 | 01:05 PM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு  நினைவுப்பிரார்த்தனைகள் இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளது. 

வவுனியாவில்...

வவுனியா இ.போ.ச வீதியில் இன்று காலை 9.30மணியளவில் கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்திப்பிரார்த்தினையும் நினைவுப்பிரார்த்தினையும் இடம்பெற்றுள்ளது.

இலங்கை பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கம் வவுனியா வீதியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் வீதி முகாமையாளர், உதவி முகாமையாளர், உத்தியோகத்தர்கள், இ.போ.ச ஊழியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு மௌன அஞ்சலி செலுத்தி உயிரிழந்த உறவுகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி ஆத்மா சாந்திப்பிரார்த்தனை மேற்கொண்டனர்.


இதனைத்தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா புதிய பஸ் நிலையத்திலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு , கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் நிகழ்வு மிருசுவில் புனித நீக்ளஸ் ஆலயத்தில் இடம்பெற்ற போது வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். 

உயிர்த்த தினத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வடமாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்வதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கோரி இருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் சமய வழிபாட்டு தலங்களில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

..........

சாவகச்சேரியில் சர்வமத பிரார்த்தனை

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு சர்வமத ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் (21) இன்று காலை 8.45 மணிக்கு சாவகச்சேரி நகரில் பொதுச் சந்தைப் பகுதியில் இடம்பெற்றது.

இன்று காலை 8.45 மணிக்கு சாவகச்சேரி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்ட விசேட நினைவஞ்சலி அரங்கில் சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சாவகச்சேரி வீரபத்திரர் ஆலய பிரதம குருக்கள், சாவகச்சேரி லிகோரியார் தேவாலய பங்குத்தந்தை, சாவகச்சேரி ஜும்மா பள்ளிவாசல் மௌலவி, நாவற்குழி விகாரையின் விகாராதிபதி ஆகியோர் ஒன்றாக  மெழுகுவர்த்தி ஏற்றி மலர்அஞ்சலி செலுத்தி சர்வமத பிரார்த்தனைகளை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது சாவகச்சேரி நகராட்சி மன்ற தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன், உப தவிசாளர் பாலமயூரன், உறுப்பினர் பௌலினா சுபோதினி, சாவகச்சேரி பிரதேச சபை உப தலைவர் செ.மயூரன், மற்றும் சாவகச்சேரி வணிகர் கழக தலைவர் சிவபாலன், நகர வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் என பலரும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனைத்தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றது. 

...............

 கிளிநாச்சியில்....

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் ஒருமாத நினைவேந்தல்கள் கிளிநாச்சியிலும் இடம்பெற்று வருகின்றன.

கிளிநொச்சியிலுள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில் இன்று காலை 8.45 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு விசேட வழிபாடு இடம்பெற்றது.

இதன்போது,  உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் மெழுகு வர்த்திகளும் ஏற்றப்பட்டு அங்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22