ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் ஆட்சி மாற்றம் குறித்து குழப்­பமடையத் தேவை­யில்லை

Published By: Vishnu

21 May, 2019 | 10:15 AM
image

(ஆர்.விதுஷா)

ஜனா­தி­பதித் தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம்  இடம் பெறும். அது தொடர்­பான அறி­விப்பு ஒக்­டோபர் மாதத்தில் தெரியவரும். மக்கள் தமது வாக்­கு­ரி­மையைப்  பயன்­ப­டுத்­து­வ­தற்­கான  வாய்ப்பு கொடுக்­கப்­படும். அதற்கு  முன்­ன­தாக ஆட்­சி­க் க­விழ்ப்பு, ஆட்சி மாற்றம்   பற்றி குழப்­ப­ம­டையத்  தேவை­யில்லை  என்று  பாரிய  நகர  மற்றும்  மேல் ­மா­காண  அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.  

அம­ர­புர பீட கொடு­கொட தம்­மா­வாஸ மஹா­நா­யக்க  தேரரை நேற்று  திங்­கட்­கி­ழமை சந்­தித்து ஆசி­ பெற்ற பின்  செய்­தி­யா­ளர்­க­ளிடம்   கருத்துத்  தெரி­விக்கும்போது இவ்­வாறு கூறிய அமைச்சர், குடும்ப  ஆட்­சியை விடுத்து தகை­மைக்கும், திற­மைக்கும் முன்­னு­ரிமை  கொடுத்து   தேசிய  பாது­காப்பு  உறு­திப்­ப­டுத்தக் கூடிய  நாட்டை   உரு­வாக்க  வேண்டும்   என்றும் குறிப்­பிட்டார்.  

அவர்  மேலும்  குறிப்­பி­டு­கையில், 

மக்கள்  பலம் எமக்குண்டு. ஆகவே  தான் நாம் இது­வ­ரையில்  ஆட்­சியில்  உள்ளோம். கடந்த  2015 ஆம்  ஆண்டு  இடம்பெற்ற  ஜனா­தி­பதித் தேர்­த­லிலும்,  பொதுத்­தேர்­த­லிலும்  எமக்கு  வாக்­க­ளித்த  மக்­க­ளுக்கு   எக்­கா­லத்­திலும்  துரோகம்  விளை­விக்க  மாட்டோம்.  அத்­துடன்  பயங்­க­ர­வா­தத்தை  நாட்­டி­லி­ருந்து  இல்­லா­தொ­ழிக்க   கட்­சி­பே­த­மின்றி  அனை­வரும்  ஒன்­றி­ணைய  வேண்டும்.  

எதிர்­வரும்  நவம்பர்  மாதம்  ஜனா­தி­பதித்  தேர்தல்  இடம்பெற­வுள்­ளது.  அது தொடர்பில்  ஒக்­டோபர்  மாதம்  அறி­விக்­கப்­படும்.  அதன்­போது மக்­க­ளுக்கு  வாக்­கு­ரி­மையைப்  பயன்­ப­டுத்­து­வ­தற்­கான   வாய்ப்­புகள்    ஏற்­ப­டுத்திக்  கொடுக்­கப்­படும்.   அதற்கு  முன்­ன­தாக  ஆட்­சியைக்  கவிழ்த்தல்   மற்றும்  மாற்றம்   தொடர்பில் குழப்­ப­ம­டைய வேண்­டிய அவ­சியமில்லை.  

அத்­துடன்,  திற­மை­க­ளுக்கும்  தகை­மை­க­ளுக்கும் முன்­னு­ரிமை கொடுத்து  தேசிய பாது­காப்பு  உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட    நாட்டை  உரு­வாக்க  வேண்டும். அதற்­கான  தகுந்த காலம்  உரு­வா­கி­யுள்­ளது.  

குடும்ப  ஆட்­சிக்கு  அப்பால்  சென்று  திற­மையும்  தகை­மையும் உடைய  தரப்­பி­ன­ருக்கு  ஆட்சிப்  பலம்  அளிக்­கப்­

ப­ட­ வேண்டும். நாம்  வெளி­நாட்­டவர்  அல்ல  இலங்கை  வாழ் மக்கள். நாம்  இந்­த­ நாட்டின்   பிர­ஜைகள். ஆகவே, நாம் எமது நாட்டின்  பாதுகாப்பு  மற்றும்  அபிவிருத்தி தொடர்பில்  கவனம் செலுத் துவோம்.  எதிர்காலத்திலும்  அவ்வாறான நடவடிக்கைகளை  தொடர்ந்தும்  முன்னெ டுப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43