சஹ்ரானின் நெருங்கிய சகாவான பாராளுமன்ற ஊழியரிடம் பல கோணங்களில் விசாரணை ; தொழில் பெற்றுக்கொடுத்த முஸ்லிம் அமைச்சர் யார் ?

Published By: Priyatharshan

21 May, 2019 | 09:50 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

குரு­ணாகல் - அல­கொ­ல­தெ­னிய பகு­தியில் தென்­னந்­தோப்பு ஒன்­றுக்குள் முன்­னெ­டுத்துச் செல்­லப்­பட்­ட­தாக கூறப்­படும் ஆயுத பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தாரி சஹ்ரான் ஹாஷி­முடன் நெருங்­கிய தொடர்பை பேணி­ய­தாக சந்­தே­கத்தின் பேரில்  கைதுசெய்­யப்­பட்­டுள்ள  தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்­பி­ன­ரான பாரா­ளு­மன்ற ஹன்சார்ட் பிரிவின்  சிரேஷ்ட மொழி பெயர்ப்­பா­ளரை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசா­ரிக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. 

கண்டி - அல­வத்­து­கொட, மாவத்­து­பொல இலக்கம் 60 எனும் முக­வ­ரியைக் கொண்ட 42 வய­தான மொஹம்மட் நெளசாட் ஜமால்தீன் என்­ப­வ­ரையே இவ்­வாறு பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசா­ரிக்க நேற்று பாது­காப்பு அமைச்சு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.  

அதன்­படி இந்த விவ­கா­ரத்தில் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்­பினர் என சந்­தே­கிக்­கப்­படும் குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் ஊழியர் உள்­ளிட்ட மூவ­ருடன் சேர்த்து  இந்த பாரா­ளு­மன்ற மொழி பெயர்ப்­பா­ள­ரையும்  குரு­ணாகல் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைத்து, குரு­ணாகல் பிரதிப் பொலிஸ்மா  அதிபர்  வசந்த கித்­சிரி ஜய­லத்தின் ஆலோ­ச­னையின் பிர­காரம் சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.   அதன்­படி தேசிய தெளஹீத் ஜமாத் எனும் பயங்­க­ர­வாத அமைப்பின்  இது­வரை வெளி­வ­ராத பல இர­க­சி­யங்­களை வெளிப்­ப­டுத்த மேல­திக விசா­ர­ணை­களில் முடி­யு­மாக இருக்கும் என  பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்­சிரி ஜயலத் தெரி­வித்தார்.

குரு­ணாகல் பொலிஸார் முன்­னெ­டுத்த நீண்ட விசா­ர­ணை­களில் ஒரு பகு­தி­யா­கவே  இந்த பாரா­ளு­மன்ற  மொழி பெயர்ப்­பா­ளரின் கைது இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார். 

இது தொடர்பில் அவர்  வீரகேச­ரிக்கு தகவல் தரு­கையில்,

'  குரு­ணாகல் பொலி­ஸா­ருக்கு முன்னர் தகவல் ஒன்று கிடைத்­தி­ருந்­தது. அதா­வது குரு­ணாகல் - அல­கொ­ல­தெ­னிய பகு­தியில் தென்­னந்­தோப்பு ஒன்றில் ஆயுத பயிற்சி முகாம் ஒன்று செயற்­ப­டு­வ­தா­கவே அந்த தகவல் கிடைத்­தி­ருந்­தது.  அதன்­படி விசா­ர­ணை­களை ஆரம்­பித்த குரு­ணாகல் பொலிஸார் முதலில் மூவரைக் கைது செய்­தனர். அதில் அந்த தென்­னத்­தோப்பின் உரி­மை­யா­ளரும் உள்­ள­டங்­கின்றார்.  ஏனைய இரு­வரில் ஒருவர் பயிற்சி முகாமின் இணைப்­பா­ள­ராக செயற்­பட்­டவர். அவர் தல்­கஸ்­பிட்டி, அம்­ப­கொட்ட பகு­தியைச் சேர்ந்­தவர். மற்­றை­யவர்  அந்த முகாமில் வள­வா­ள­ராக செயற்­பட்­டவர். அவர் திஹாரி பகு­தியைச் சேர்ந்­தவர். இவர்கள் மூவரும் கடந்த 9 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டனர். அவர்கள் விசா­ர­ணை­களின் பின்னர்  நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு எதிர்­வரும் 24 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

 அந்த பயிற்சி முகாம் தொடர்பில் தொடர் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.  அந்த விசா­ர­ணை­களில் மேலும் இருவர் கைது செய்­யப்­பட்­டனர். அவர்­களில் ஒருவர் குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் ஊழியர்.  அவரும் தல்­கஸ்­பிட்டி, அம்­ப­கொட்டே பகு­தியைச் சேர்ந்­தவர். மற்­றை­யவர்  ஹாலி எல , அம்­ப­கொட்டே பகு­தியைச் சேர்ந்­தவர்.  அவ­ரி­ட­மி­ருந்து பல பெறு­ம­திகள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த காசோ­லைகள் கைப்­பற்­றப்­பட்­டன.

அவ்­வி­ரு­வரும் கடந்த 11 ஆம் திகதி கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத தடைச்  சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.  அவர்­களில் குரு­ணாகல் வைத்­தி­ய­சாலை ஊழி­யரின் வங்­கிக்­க­ணக்­குக்கு பல்­வேறு நபர்கள் அனுப்பி வைத்­துள்ள பெரும் தொகை பணம் தொடர்பில் தீவிர அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.' என தெரி­வித்தார். 

இந் நிலை­யி­லேயே குறித்த வைத்­தி­ய­சாலை ஊழியர் வழங்­கிய தக­வல்கள் உள்­ளிட்­ட­வற்றை மையப்­ப­டுத்தி கடந்த சனிக்­கி­ழமை நெளஷாட் ஜலால்தீன் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.  ' ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­க­ளிடம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில்  வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­யவே  இந்த பாரா­ளு­மன்ற மொழி பெயர்ப்­பாளர்  கைது செய்­யப்­பட்டார். அவரை தடுத்து வைத்து விசா­ரிக்க நாம் அனு­மதி பெற்­றுக்­கொண்­டுள்ளோம்.  இந்த விவ­கா­ரத்தில் இது­வரை அறுவர் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில் அவர்­களில் மூவர் விளக்­க­ம­றி­யலில் உள்­ளனர். ஏனைய மூவரும் தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் குரு­ணாகல் பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர் என பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர  மேலும் சுட்­டிக்­காட்­டினார்.

தீவிர விசா­ரணை

  கைது செய்­யப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற மொழி பெயர்ப்­பா­ள­ரிடம் சிறப்பு பொலிஸ் குழு தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­துடன்,  அவர் கடமை நிமித்தம் தங்­கி­யி­ருந்த இரா­ஜ­கி­ரிய இருப்­பிடம் மற்றும் அவ­ரது அல­வத்­து­கொட பகு­தியில் உள்ள வீடு ஆகி­யன பொலி­சாரால் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  இதன்­போது பொலி­சாரால் சந்­தே­கத்­துக்­கி­ட­மான பொருட்கள் சிலவும் ஆவ­ணங்­களும் பொறுப்பில் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அரிய முடிகின்றது.

நெளஷாட் ஜலால்தீன் கடந்த 2006 ஆம் ஆண்டு பாராளுமன்றின் ஹன்சார்ட் பிரிவின் மொழிபெயர்ப்பாளராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். முஸ்லிம்  அமைச்சர் ஒருவரின் சிபாரிசின் பேரில் அவருக்கு அந்த தொழில் கிடைத்ததாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பிலும் விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

 இவரது கைது தொடர்பில் பாராளுமன்ற செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47