தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் சபை மற்றும், ரக்பி, வலைப்­பந்­தாட்டம் மற்றும் தட­கள சங்­கங்­க­ளுக்கு அந்­நாட்டு அரசு அதி­ரடி தடை உத்­த­ரவை பிறப்­பித்­துள்­ளது.


கிரிக்கெட் நிர்­வா­கத்தில் மாற்­றங்­களை செய்ய மறுத்து வரும் தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் சபை, தமது சொந்த மண்ணில் சர்­வ­தேச போட்­டி­களை நடத்த அந்­நாட்டு அரசு தடை விதித்­துள்­ளது.


தென்­னா­பிரிக் காவில் கறுப்பர், வெள்­ளையர் இன சர்ச்சை நீண்­ட­கா­ல­மாக இருந்து வரு­கின்­றது.இந்தப் பிரச்­சி­னை­யால்தான் நெல்சன் மண்­டே­லா­ கூட 27 ஆண்­டுகள் சிறை­வாசம் அனு­ப­விக்க நேர்ந்­தது.

தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் அணியில் கறுப்பர் இனத்­த­வ­ருக்கு அணியில் தடை விதித்­ததால் 1970ஆம் ஆண்டு சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் அணிக்கு அதி­ர­டி­யாக தடை விதித்­தது.


பின்னர் இதில் மாற்றம் கொண்டு வரப்­பட்ட நிலையில் 1991ஆம் ஆண்டு தடை விலக்கிக் கொள்­ளப்­பட்டு தென்­னா­பி­ரிக்க அணி மீண்டும் சர்­வ­தேசப் போட்­டி­களில் விளை­யாட அனு­மதி வழங்­கப்­பட்­டது.


தற்­போது அணியில் கறுப்­பின வீரர்­க­ளுக்கு 9 சத­வீத இடம் கொடுக்­கப்­பட்டு வரு­கி­றது. இதில் மாற்­றங்­களை கொண்­டு­வர வேண்டும் என்று அரசு தெரி­வித்­துள்­ளது.


இதை ஏற்றுக் கொள்­ளாத ரக்பி, கிரிக்கெட், வலைப்­பந்­தாட்ட, தட­கள சங்­கங்­களுக்கு அரசு தடை­வி­தித்­துள்­ளது.
இந்தத் தடையால் தடை­செ­ய்யப்­பட்ட குறிப்­பிட்ட நிர்­வா­கங்கள் சொந்த மண்ணில் சர்­வ­தேச தொடர்­களை நடத்த அனு­மதி கோர­ மு­டி­யாது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


இதன்­படி 2023 ஆம் ஆண்டு வரை தொடர்­களை நடத்த அரசு அனு­மதி வழங்­காது.


இருப்­பினும் அரசின் பரிந்­து­ரை­களை ஏற்றுக் கொண்டால் அடுத்த வருடமே தடை நீக்கப்படும் என்று அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் பிக்கைல் மபலுலா தெரிவித்துள்ளார்.