வவு­னியா பொரு­ளா­தார மத்­திய நிலையம்; ஜனா­தி­ப­தியின் சந்­திப்பின் பின் முடிவு

Published By: Raam

27 Apr, 2016 | 09:16 AM
image

ஓமந்தை,வவு­னி­யாவில் நிறு­வப்­ப­ட­வுள்ள பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்­திற்­கான இடத் தெரிவில் ஏற்­பட்­டுள்ள குழப்ப நிலை தொடர்பில் ஜனா­தி­பதியுட­னான சந்­திப்பின் பின் முடிவு எட்­டப்­படும் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் வவு­னி­யாவில் இருந்து சென்ற விசேட குழு­விடம் தெரி­வித்­துள்­ள­தாக வன்­னிப் ­ப­ாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் தெரி­வித்­துள்ளார்.

கிரா­மிய பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சின் நிதி உத­வியில் வவு­னி­யாவில் அமைக்­கப்­ப­ட­வுள்ள பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தை­யிலா அல்­லது தாண்­டிக்­கு­ளத்­திலா அமைப்­பது என்­பது தொடர்பில் கடந்த சில நாட்­க­ளாக ஏற்­பட்ட குழப்­ப­நி­லையை அடுத்து வன்­னிப்­பா­ரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா, வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளான ஜி.ரி.லிங்­க­நாதன், ம.தியா­க­ராசா, எம்.பி.நட­ராஜா, இ.இந்­தி­ராசா, வட­மா­காண சுகா­தார அமைச்சின் பிரத்­தி­யேக செய­லாளர் ப.சத்­தி­ய­சீலன், முன்னாள் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வினோ, வர்த்­தக சங்க பிர­தி­நி­தி­க­ளான த.இரா­ச­லிங்கம், புலேந்­திரன் ஆகியோர் நேற்று முன்­தினம் வட­மா­காண முத­ல­மைச்­சரை அவ­ரது அலு­வ­ல­கத்தில் சந்­தித்து குறித்த குழப்­ப­நிலை தொடர்பில் கலந்­து­ரை­யா­டினர்.

இதன்­போது குறித்த விடயம் தொடர்பில் தாம் கரி­சனை கொண்­டுள்­ள­தா­கவும், வவு­னியா மாவட்­டத்­திற்கு ஒதுக்­கப்­பட்ட இந்த பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்­திற்­கான நிதி திரும்பிச் செல்­லாது, வவு­னியா மாவட்­டத்­தி­லேயே பயன்­ப­டுத்­தப்­படும் என தெரி­வித்த முத­ல­மைச்சர் நாளை 28 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சேனவை சந்­திக்கும் போது ஓமந்­தையில் குறித்த பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை அமைப்­பது தொடர்பில் கலந்­து­ரை­யாடி இறுதி முடிவு எடுக்­கப்­படும் என முத­ல­மைச்சர் உறு­தி­ய­ளித்­த­தாக வன்னிப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் தெரி­வித்­துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50