ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரிய அகதிகள் யாழிலும் தங்க வைப்பு

Published By: Digital Desk 4

20 May, 2019 | 01:03 PM
image

நீர்கொழும்பில் வசித்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளை வடக்கிற்கு அழைத்துவரும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, அவர்களில் சிலர் யாழ்ப்பாணத்திற்கும்  அழைத்துவரப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அழைத்துவரப்பட்ட அகதிகளில் தற்போதுவரை 13 அகதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள சில வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி நாட்டிலேற்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களையடுத்து அவர்களுக்கு தங்கிருந்த இடத்தில் எதிர்ப்பு நிலவிய நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, அவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

இதையடுத்து, அவர்களை வடக்கிற்கு அழைத்துவரும் முயற்சியை அரசு மற்றும் ஐ.நா. மேற்கொண்டன. இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு ஆளுநருடன் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும், அவர்கள் சம்மதித்த போதும், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். அந்த எதிர்ப்பை மீறி வவுனியாவில் ஒரு தொகுதி அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே யாழ்ப்பாணத்திற்கும் அகதிகள் அழைத்துவரப்படுகின்றனர். முதற்கட்டமாக நான்கு குடும்பன்களைச் சேர்ந்த 13 பேர் அழைத்துவரப்பட்டு வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் குறித்த அகதிகளில் சிலர் யாழ்ப்பாணத்திலுள்ள வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிலர் தாம் அவர்களைப் பொறுப்பெடுப்பதாகவும் சுயமாகவே தமது வீடுகளில் தங்கவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19