நாரஹேன்பிட்டி பொலிஸ்நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொஹுவலை பிரதேசத்தில் வர்த்தகரொருவரிடமிருந்து 25 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப்பெற முயன்ற போது நேற்று இவர் கைதுசெய்யப்பட்டார்.

போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்காமலிருக்க பொலிஸ் பொறுப்பதிகாரி இலஞ்சம் கோரியமை குறிப்பிடத்தக்கது.