பா.ஜ.க கூட்டணியே  அதிக இடங்களில் ஆட்சி அமைக்கும் ; கருத்துக் கணிப்பில் தகவல்

Published By: Digital Desk 4

19 May, 2019 | 09:54 PM
image

இந்திய பாராளுமன்ற தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு பின்னர் இன்று மாலை வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பா.ஜ.க 300 க்கும் அதிகமான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது.

பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் - கருத்துக் கணிப்பில் தகவல்

இந்தியாவின் 17 வது பாராளுமன்றத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக (தமிழ்நாட்டின்  வேலூர் பாராளுமன்ற தொகுதியை தவிர) நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பிரபல ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

அவ்வகையில், ரிப்பப்ளிக் டி.வி. மற்றும் ஜன்கிபாத் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் பா.ஜ.க கூட்டணி  287 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும்  ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களிலும், இதர கட்சிகள் 127 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

இதேபோல், டைம்ஸ் நவ் மற்றும் சி.என்.எக்ஸ். நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பா.ஜ.க கூட்டணி 306 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 132  இடங்களிலும், இதர கட்சிகள் 104 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

மேலும், நியூஸ் எக்ஸ் மற்றும் இந்தியா நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, பா.ஜ.க கூட்டணி 298 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும்  ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 118  இடங்களிலும், இதர கட்சிகள் 126 தொகுதிளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47