இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்க்கொள்வதில் இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி

Published By: Digital Desk 4

19 May, 2019 | 03:05 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

மூன்று தசாப்த உள்நாட்டு போர் முடிவின் ஒரு தசாப்த நிறைவை இன்று (மே - 19 ) இலங்கை அனுபவிக்கும் இத்தருணத்தில் மற்றுமொரு அச்சத்திற்குள் நாடு தள்ளப்பட்டுள்ளது. பல உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தலுக்குள் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளமையே நாட்டின் தற்போதைய அச்சத்திற்கு காரணமாகியுள்ளது.

கடும் இஸ்லாமிய அடிப்படைவாத பின்னணியை கொண்டுள்ள ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொண்ட தாக்குதலின் மூலம் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை தெற்காசியா வரை விஸ்தரித்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்)

இலங்கையில் தொடர் தற்கொலை தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமஆத் அமைப்பினர் ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிப்பெற்றவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும், இந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாத அமைப்பின் செயற்பாடுகள் சிரியா, ஈராக், ஆபிரிக்கா, மத்திய கிழக்கா சிரியாவில் மிகவும் தீவிரமாக காணப்படுகின்ற நிலையில் மேற்குலக நாடுகளும் - தற்போது தெற் காசியாவும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல் இலக்குகளாக காணப்படுகின்றன. 

ஈரான் மற்றும் சிரியா பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பிற்குள் ஓர் இஸ்லாமிய ஆட் சியை உருவாக்க வேண்டும் என்பதும் இஸ்லாம் மதசாரா பிரிவினரை கொலை செய்து விட வேண்டும் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையாக காணப்படுகின்றது.

சுன்னி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களை அடிப்படையாக கொண்டு உருவாகிய இந்த ஐ.எஸ். அமைப்பு ஈராக் படையினரை வெற்றிகொண்டு ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகள் சிலவற்றை முழுமையாகக் கைப்பற்றி அதனை இஸ்லாமிய கலீபா ஆட்சிக்குட்பட்ட ஒரு தனிநாடாக அறிவித் திருந்தது.

எவ்வாறாயினும் ஐ.எஸ். அமைப்பு திடீரென உருவானதொன்றல்ல. 2000ஆம் ஆண்டிலிருந்து பல் வேறுபட்ட பெயர்களில் இயங்கி வந்திருப்பதாக பூகோள பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜமாஅத் அல் தௌஹீத் அல் ஜிஹாத் எனும் பெயரில் அபுல் முஸாப் அல் ஷர்காவி எனும் இஸ்லாமிய கிளர்ச்சியாளரினால் ஐ.எஸ். அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் பல வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை கொண்ட அமைப்புகள் இணைந்தன . மேலும் அல் கைதா அமைப்பின் துணையுடன் தமது நடவடிக்கைகளை ஐ.எஸ். அமைப்பு முன்னெடுத்தது. இதனடிப்படையில் அல் கைதாவின் ஈராக்கின் இயக்கம் மற்றும் முஜாஹிதீன் ஷுரா சபை ஆகிய பெயர்களில் ஐ.எஸ். அமைப்பு செயற்பட்டிருந்தது.  ஆனால் 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் அல் கைதாவிலிருந்து முற்றாகப் பிரிந்த தனி அமைப்பாக செயற்பட தொடங்கியது.

ஈராக்கிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றுதல், ஈராக்கில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துதல், ஈராக்கை தளமாகக்கொண்டு இஸ்ரேல் உள்ளிட்ட ஏனைய நாடுகளை தாக்குதல் என்பன ஐ.எஸ் அமைப்பின் இலக்குகளாக காணப்பட்ட போதிலும் , தனித்து செயற்பட ஆரம்பித்த பின்னர் , ஜோர்டான், இஸ்ரேல், பலஸ்தீனம், லெபனான், குவைத், சைப்பிரஸ் மற்றும் தெற்கு துருக்கி உள் ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துதல், தமது ஆட்சிக்குட்பட்ட எல்லையில் ஷியா முஸ்லிம்களை அழித்தல் போன்ற இலக்குகளையும் திட்டங்களையும் ஐ.எஸ். அமைப்பு விஸ்தரித்தது.

ஆனால் ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் ஈராக் இராணுவம் கடும் தொடர் தாக்குதலகளை நடத்தியது. ஈராக்கிற்கு உதவியாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் ஐ.எஸ். அமைப்பிற்கு பெரும் தோல்வி ஏற்பட ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த மொசூல் நகரை ஈராக் இராணுவம் கைப்பற்றியது. இதனையடுத்து அங்கிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவிற்குள் சென்று தஞ்சமடைந்தனர். ஆனால் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான இறுதிக்கட்ட போர் சிரியாவிலேயே ஆரம்பித்தது.

சிரிய அரசுப்படைக்கும் - கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு காலூன்றி கடும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இதன் விளைவாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பகுதியான பாக்ஹிஸ்சில் இருந்து 2000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறினர். இதன் பின்னர் ஐ.எஸ் அமைப்பிறகு எதிராக சிரிய அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து கடுமையான தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் தீவிரமாக களம் இறங்கியது. அதன் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்த அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டன. தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு ஒரே நாளில் 3 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரிய இராணுவத்திடம் சரணடைந்தனர்.

தற்போது ஈராக் மற்றும் சிரியாவிற்கு இடைப்பட்ட எல்லை பகுதியில் சிறிய குழுவாக ஐ.எஸ் அமைப்பு மறைந்துள்ளது. இந்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி தனது அமைப்பில் உள்ள பயங்கரவாத உறுப்பினர்களுக்கு விஷேட அறிவிப்பை விடுத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. நாடுகளை சாராத ஐ.எஸ் அமைப்பினர் தங்கள் நாடுகளுக்கு தப்பி சென்று விட வேண்டும் அல்லது அவர்கள் தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற வேண்டும் என்பதே அந்த அறிவிப்பு என கூறப்படுகின்றது.

சமூக வலைத்தளங்கள்

ஐ.எஸ். அமைப்பு புதிய அங்கத்துவர்களை குறிவைத்து ஊடகங்களை சரியாக பயன்படுத்தி வருகிறது. ட்விட்டர், முகப்புத்த்கம் (பேஸ்புக்), இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை ஐ.எஸ். அமைப்பினர் தீவிரமாக செயற்பட்டு வருகின்றார்கள். தமது கொள்கைகள், செயற்பாடுகள் மற்றும் செய்திகள் போன்றவற்றை பெரும் பகுதியினரிடம் எளிதாக சென்றடைய இவர்கள் வழிவகுக்கிறார்கள்.

குறிப்பாக முக நூலை பயன்படுத்தி இஸ்லாமிய இளைய சமூகத்தினரை குறிவைத்து அடிப்படைவாத பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.

மேலும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சுமார் 60 இணைய தளங்களை இலங்கையில் முடக்குவது குறித்து தற்போது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பயங்கரவாத அமைப்பின் 44 இணைய தளங்களை இந்தியா முடக்கியுள்ளது. மேலும் பயங்கரவாத அமைப்பிற்கு சொந்தமான இணைய தளங்கள் பலவற்றை பல நாடுகள் தடை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிதி - ஆயுத வரவு

பல நாடுகளில் உள்ள செல்வந்தவர்கள் ஐ.எஸ் அமைப்பிற்கு நிதி வழங்குவதாக கூறப்படுகின்றது. இவர்கள் பெரும்பபாலும் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்காகவே உள்ளனர். மேலும் கொள்ளை சம்பவங்களில் கொள்ளையடித்த பணத்தையும் வைத்து இவர்கள் இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. தினமும் குறைந்தது 3 மில்லியன் டொலர்கள் வரை இவர்களுக்கு உலகின் வெவ்வேறு இடங்களில் இருந்து நிதியுதவி வந்த வண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

20 நாடுகளில் உள்ள நிறுவனங்களின் மூலம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் மூலப்பொருட்கள் வழங்கப்படுகின்றது. ஐ.நா. சபையினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் பல நாடுகளில் செயற்படும் நிறுவனங்களில் இரசாயன ஆயுதங்கள், வெடி மருந்துகளை தூரத்தில் இருந்து வெடிக்க செய்வதற்கான அலைபேசிகள் போன்ற 700 பொருட்களை தயாரித்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

பிரசல்ஸ் தாக்குதல்

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் நடாத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 30 பேருக்கும் அதிகமானோர் பலியானதுடன் 200 மேற்பட்டோர் படுகாயமடைந்நதனர். ஜவெண்டம் சர்வதேச விமான நிலையத்திலும் மேல்பீக் சுரங்க புகையிரத நிலையத்திலும் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

பாரிஸ் தொடர் தாக்குதல்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மிகப்பெரிய தொடர் தாக்குதலை ஐ.எஸ் அமைப்பு நடத்தியது. பிரான்ஸ் விளையாட்டரங்கம் மற்றும் செயின்ட் டெனிசு என்ற வடக்குப் புறநகர்ப் பகுதியிலும் இந்த தாக் குதல் நடத்தப்பட்டது. மூன்று வெவ்வேறு குண்டுவெடிப்புகளும், ஆறு இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்களும் இடம்பெற்றன. இந்த தாக்குதலில் 127 பேர் உயிரிழந்ததனர்.

எச்சரிக்கைகள்

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்படுகிறது. சர்வதேச பாதுகாப்பு நிலைமைகள், போர் மோதல்கள் தொடர்பில் ஆய்வு நடத்தும் அமெரிக்க நிறுவனமான சர்வதேச யுத்த ஆய்வு நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுத்திருந்தது.

குறிப்பாக ஈராக், பலஸ்தீனம், சிரியா, இஸ்ரேல், லெபனான், அமெரிக்கா, கனடா, சவூதி அரேபியா, ஈரான், சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல மேற்குலக நாடுகளை தமது  இலக்காக ஐ.எஸ். அமைப்பு பட்டியலிட்டுள்ளிருந்தது. இலங்கை

ஐ.எஸ். அமைப்பு இலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியே பெரும்பாலும் இலங்கை முஸ்லிம்களை ஐ.எஸ் அமைப்பு தன்வசப்படுத்தியுள்ளது. இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் ஊடாக தீவிரவாத செயற் பாடுகளை மேற்கொண்டுள்ளது.

ஐ.எஸ் அமைப்பில் தீவிரமாக பயிற்சிப் பெற்றவர்களாகவே சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் காணப்படுகின்றனர். இங்கு அவதானத்தில் கொள்ள வேண்டிய விடயம் யதெனில் சஹ்ரான் அமைப்பில் உள்ள குழுவின் மொத்த எண்ணிக்கை குறித்து இறுதியான இலக்கத்தை கூற இயலாது உள்ளது. ஐ.எஸ் அமைப்பில் நேரடியாக சென்று பயற்சிப்பெற்றவர்கள் இருக்கின்ற நிலையில் அவர்களால் கடந்த இரண்டு இல்லது  மூன்று உருவாக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது கேள்விக்குறியான விடயமாகும். இதனை அடிப்படை யாகக் கொண்டே இலங்கையில் தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன்  பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இலக்குகள்

நாட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் சஹ்ரான் குழுவின் செயற்பாடுகன் ஏற்கனவே காத்தான்குடியை மையப்படுத்தி கிழக்கில் காணப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறை கண்காணித்தாக கூறப்பட்ட போதிலும் அந்த கணிப்புகள் தவறானது என்று சொல்லும் வகையிலேயே உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காணப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு மத்தியில் பொது மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

இந்த அச்சத்திற்கு காரணம் நாட்டின் படைகள் மீதான சந்தேகத்தில் அல்ல , மாறாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு பொது மக்கள் என்பதனாலாகும். இவற்றுக்கு சிறந்த உதாரணங்காகவே பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை சுட்டிக்காட்டியுள்ளேன். இவ்வாறான தாக்குதல்கள் பல நாடுகளிலும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் இலங்கையிலும்

சவால்கள்

விடுதலை புலிகளுடனான போர் முடிவடைந்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான  செயற்பாடுகள் முப்படைகளின் புலனாய்வு பிரிவுகள் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவுகளுடனானதொரு கூட்டு நடவடிக்கைகள் காணப்பட்டன். ஆனால் அவை பிற்காலத்தில் ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்கப்பட வில்லை என்பது தற்போது வெளிப்படுகின்ற விடயங்களாகும். எனவே தான் உயிர்த்த ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை இலங்கையால் முறியடிக்க முடியாமல் போனது.

மேலும் இந்திய புலனாய்வு துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் தாக்குதலை தடுக்க முடியாமல் போனமையானது தேசிய பாதுகாப்பு தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் உண்மையான தன்மையை வெளிப்படுத்துகின்றது. இதன் விளைவாக உயிர்த்த ஞாயிரன்று இடம்பெற்ற தாக்குதல அரசியல்மயமாக்கப்படும் நிலை உருவாகியது. அரசியல் தரப்புகள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்கின்றனர்.

மறுப்புறம் பாதுகாப்பு தரப்புகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் சோதனை நடவடிக்கைகளின் போது மீட்கப்படுகின்ற ஆயுதங்கள் மற்றும் ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் என்பன மக்கள் மத்தியில் அச்சத்திற்கு காரணமாகியுள்ளது.

துப்பாக்கி தாங்கிய இராணுவம் பாடசாலைகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படுகின்ற போதிலும் பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் அச்சம் கொள்வதற்கு இதுவே காரணமாகின்றது. இதனால் தேசிய பாதுகாப்பு சார்ந்த விடயத்தை மக்கள் கையிலெடுத்துள்ளதன் வெளிபாடாக குறித்த இனத்தின் மீதான வன்முறைகளுக்கு காரணமாகியது.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தீர்க்கப்பட வேண்டிய இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் தேசிய பாதுகாப்பும் தற்போது மக்கள்மயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையானது நாட்டில் பாரதூரமான நிலைமைகளை உருவாக்கி இன குரோதத்திற்கு வித்திட்டுள்ளது. எனவே தேசிய பாதுகாப்பு விவகாரத்தை அரசியல்மயமாக்குதலை அவசரமாக தடுக்க வேண்டும் என்பது முக்கியமானதொன்றாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22