வாழ விடுங்கள்!

Published By: Digital Desk 3

18 May, 2019 | 11:13 AM
image

ஒரு பாம்பு கடித்து விட்­டது என்­ப­தற்­காக கண்டகண்ட  பாம்­மை­யெல்லாம் அடித்­து­விட வேண்டும் என்று கணிப்­பது போன்று உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­கு­தல்­களில் முஸ்லிம் பெயர் ­தாங்­கிய ஒரு குழு­வினர் குண்டு வைத்து அப்­பாவி மக்­களைக் கொன்றுவிட்­டார்கள் என்­ப­தற்­காக இந்­நாட்டில் வாழ்­கின்ற அத்­தனை முஸ்­லிம்­க­ளையும் தங்­க­ளுக்கு இயலுமான ரீதியில் பலி தீர்க்க முனை­வது எந்த வகையில் நியா­ய­ம்?

ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களை மேற்­கொண்ட பயங்­க­ர­வா­தி­களின் பெயர்­க­ளையோ அல்­லது அவர்­க­ளது அமைப்பின் பெய­ரையோ உச்­ச­ரிப்­ப­தற்குக் கூட அச்­சமும் வெட்­கமும் முஸ்­லிம்கள் கொண்­டுள்ள சூழலில், அவ்­வ­மைப்பை யார் வளர்த்­தது என்­பதை நேரம் வரும்­போது வெளிப்­ப­டுத்­துவோம் என அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள கூறி­யி­ருக்­கிறார்.

இருந்தும், இத்­தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்­களைக் கண்டுபிடிக்கும் பாது­காப்பு படை­களின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு முஸ்லிம் மக்கள் தங்­க­ளது பூரண ஒத்­து­ழைப்பை அந்நாள் முதல் வழங்கி வரு­கி­றார்கள். ­நாட்டில் மீண்டும் அமைதிவாழ்வு திரும்ப வேண்டும் என்ற நோக்கில் தங்­க­ளுக்கு முடிந்த ஒத்­து­ழைப்­புக்­களை முஸ்­லிம்கள் வழங்கி வருகின்றனர். இந்தச் சூழலில் அவர்­க­ளையும் ஏனைய மக்­க­ளையும் நிம்­ம­தி­யாக வாழவிடாது  சட்­டமும் ஒழுங்கும் செயற்­பாட்டில் உள்ள வேளையில்  திட்­ட­மிட்ட வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப் ­ப­டு­வது நல்லதல்ல. இது வாழ்­வு­ரி­மையின் மீதான சந்­தே­கத்­தையும், ஜன­நா­யக நாட்டின் சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளுக்­கான பாது­காப்பின் மீதான கேள்­வி­யையும் எழுப்பி இருப்­ப­தாகக் கரு­தப்­ப­டுகிறது. அனைத்து மக்­க­ளி­னதும் அமை­திக்கு குந்­தகம் விளை­விப்­ப­தா­கவும் நோக்­கப்­ப­டு­கி­றது.

நாம் அனை­வரும் இலங்­கையர். இல ங்கை என்ற ஜன­நா­யக நாட்டில் வாழ்ந்து கொண்­டி­ருக்கும் சமூகப் பிர­ஜை­க­ளுக்கு நல்­வாழ்வு கிட்டச் செய்­வதே ஜன­நா­ய­கத்தின் குறிக் ­கோ­ளாகும். ஜன­நா­யக நாட் டில் வாழும் மக்­க­ளுக்கு சுதந்­தி­ர­மாக வாழும் உரி­மை­யு­முண்டு. ஒரு சமூ­கத்­தைச் ­சார்ந்த ஒரு தரப்­பினர் புரிந்த குற்­றத்­திற்­காக முழுச்­ச­மூ­கத்­தி­னதும் உரி­மை­க­ளையும், சுதந்­தி­ரத்­தையும் பறிக்க  முயற்சி மேற்­கொள்­வதும், வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்து விடு­வதும் மனி­தநே­யத்­தையும், மனி­தத்­து­வத்­தையும் மதித்து சக­வாழ்­வுடன் வாழ நினைக்கும் ஜன­நா­யகத் தேசி­யத்தின் மக்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த ­ஒன்­றாகும்.

அச்சமான சூழல் 21/4 தாக்­கு­தலும் 13/5 வன்­மு­றை­களும்

எவரும் எதிர்­பா­ராத ஏப்ரல் 21 தாக்­குதல் இடம்­பெற்று மூன்று வாரங்கள் கடந்து விட்­டன. தாக்­குதல் சூத்­தி­ர­தா­ரிகள்  செத்து மடிந்­துள்ள நிலையில் அவர்­க­ளுடன் தொடர்­பு­பட்ட பலர் கைது­செய்­யப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டும், தடுப்­புக்­கா­வ­லிலும் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நாட்டின்  அமை­திக்கு மாத்­தி­ர­மின்றி பொரு­ளா­தாரம் உட்­பட பல்­வேறு துறை­க­ளிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள இத்­தாக்­குதல் சம்­பவம் அனைத்து இன மக்­க­ளி­னதும் இயல்பு வாழ்வைப் பாதித்து அச்­ச­மான சூழ­லையும் தோற்றுவித்­துள்­ளது. நிம்­ம­தி­யாக வாழ விடாமல் தடுத்­தி­ருக்­கி­றது. 

ஆனால், இத்­தாக்­கு­தல்­க­ளுக்கும் ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளுக்கும் தொடர்­பில்லை என அனர்த்தம் நடை­பெற்ற நாள் முதல் முஸ்­லிம்­க­ள் வலியு­றுத்தி வரு­கின்­றனர்.  ஜனா­தி­பதி உட்­பட சில அர­சியல் தலை­வர்கள், மதத் தலை­வர்­க­ள், இத்­தாக்­கு­தல்­க­ளுடன் ஒட்டு மொத்த முஸ்­லிம்­க­ளையும் தொடர்­பு­ப­டுத்த வேண்டாம் அவர்­களை பயங்­க­ர­வா­தத்­திற்குள் தள்­ளி­விட வேண்டாம் என்று கூறி வரு­கின்றனர்.

இதே­வேளை, இத்­தாக்­கு­தல்­களில் நேர­டி­யாகப் பாதிப்பை உணர்ந்த,சுமந்த பே­ராயர் கர்­தினால் மல்கம் ஆண்டகை மற்றும் ஏனைய மதத் தலை­வர்கள், நல்­லுள்ளம் கொண்­டோரின் வேண்­டு­கோள்­க­ளையும் ஆலோ­ச­னை­க­ளையும் கேட்டு. கிறிஸ்­தவ மக்கள் அமைதி  காத்தாலும், உற­வு­களை இழந்த வேத­னை­யோ­டுதான் இருக்கின்றார்கள். சகோ­தர கிறிஸ்­தவ மதத்தலை­வர்கள் பாதிக்­கப்­பட்ட மக்­களை கொஞ்சம் கொஞ்­ச­மாக அவ்­வே­த­னை­யி­லி­ருந்து விடு­படச் செய்து சாதா­ரண இயல்பு வாழ்க்­கைக்கு  திருப்ப  முயற்­சித்து வரு­கின்­றனர்.

 இச்­சந்­தர்ப்­பத்தில், வன்­முறைத் தாக்­கு­தல்­களை மேற்­கொள்­வ­தனால் ஏற்­படும் இழப்­பு­க­ளையோ, துய­ரங்­க­ளையோ, விளை­வு­க­ளையோ கருத்­திற்­கொள்­ளாது, மதத் தலை­வர்­க­ளி­னதும் ஏனையோரினதும் வேண்­டு­கோள்­க­ளையும், ஆலோ­ச­னை­க­ளை­யும் பொருட் ­ப­டுத்­தாது, காடையர் கூட்டம் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்து உயிர் இழப்­பையும், சொத்­தி­ழப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி நீர்­கொ­ழும்பு போரத்தொட்ட பகு­தியில் இரு தனி­ந­பர்­க­ளுக்­கி­டையில் உரு­வான கருத்து முரண்­பா­டு­களை பூதா­க­ர­மாக்கி முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளையும், வீடு­க­ளையும் சேதப்­ப­டுத்­தினர். ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் பிர­தான வீதியைத் தவிர்த்து உள்ளூர் வீதி வழி­யாகச் சென்று அப்­ பி­ர­தே­சங்கள் சில­வற்றில் இத்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக பிர­தே­ச­வா­சிகள் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில்,  படை­யினர் நிலை­மை­களைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­த­போ­திலும், அப்­பி­ர­தேச மக்­களின் இயல்பு வாழ்க்­கைக்கு குந்­தகம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அமை­தி­யாக வாழ விடாமல் அச்­சம்­ப­வங்கள் தடுத்­தி­ருக்­கி­ன்றன. 

நீர்­கொ­ழும்புப் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அப்­பி­ர­தேசங்­க­ளுக்குச் சென்ற பேராயர் கர்­தி னால் மல்கம் ரஞ்ஜித் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கைதூக்க வேண்டாம் என கத்­தோ­லிக்க மக்­க­ளிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஆறு­தலும் கூறி­யி­ருந்தார். இந்­நி­லையில், கடந்த 13ஆம் திகதி குண்டுகள் வெடிக்­கு­மா? தாக்­கு­தல்கள் தொட­ருமா?--_ என்ற அச்­சத்­து­ட­னான கேள்­வி­களை, கருத்­துக்­களை பொறுப்பு வாய்ந்த அர­சி­யல்­வா­திகள் ஊட­கங்கள் வாயி­லாக வெளிப்­ ப­டுத்தி மக்­களை அச்­சத்­திற்­குள்­ளாக்­கி­யி­ருந்த நிலையில், சிலா­பத்தில் முஸ்லிம் நபர் ஒருவர் இட்ட முகநூல் பதி­வொன்றின் கருத்துத் தொடர்பில் ஏற்­பட்ட  சர்ச்சை அப்­பி­ர­தேசத்தில் பதற்­ற­மான சூழ்­நி­லை யைத் தோற்றி வன்­ மு­றைக்கு இட்டுச் சென்­றது. 

இப்­பி­ர­தே­சத்­திலும் பள்­ளி­வாசல் உள்­ளிட்ட சொத்­துக்­க­ளுக்குச் சேதம் விளை­விக்­கப்­பட்­டது. வன்­மு­றை­களின் பின்னர் அமைதி நிலை­நாட்­டப்­பட்­டது.  இந்­நி­லையில் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை குரு­நாகல் மாவட்­டத்தின் குளி­யாப்­பிட்டி மற்றும் நிக்­க­ர­வட்­டிய ஆகிய தொகுதி­க­ளுக்­குட்­பட்ட பகு­தி­களில் முஸ்லிம் கிரா­மங்­களை இலக்கு வைத்து திட்­ட­மிட்ட குழு­வொன்று பள்­ளி­வா­சல்கள், வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள் மீது  தொடர் தாக்­கு­த­ல்களை நடத்தியது. இவ்­வன்­மு­றைத்­தாக்­கு­தல்­க­ளினால் நான்கு பிள்­ளை­களின் தந்தை ஒருவர் பலி­யா­னார். பெரும் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அப்­பாவி முஸ்­லிம்கள் நிர்­க் க­தி­யான நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர். ஏப்­ரல் 21 தாக்­கு­தல்கள் புனித தலங்­களில் மேற்­கொள்­ளப்­பட்டு கிறிஸ்­தவ மக்­களின் மனங்­களை எந்­த­ள­வுக்கு பாதித்­ததோ, அந்த புனித நாளை அனுஷ்­டிக்க முடி­யாமல் செய்­ததோ அதே பாதிப்பை புனித ரமழான் நாட்­களில் முஸ்­லிம்கள் மீது கட்­ட­விழ்த்து விடப்­படும் தாக்­கு­தல்கள் மன வேத­னை­யையும், அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கின்றது.  புனித நோன்பை நோக்கவிடா­மலும் ரமழான் மாத வழி­பா­டு­களை மேற்­கொள்­ளவிடா­மலும் தடுத்­தி­ருக்­கி­றது.

வாழ்வுரிமை கேள்விக்குறி

வடமேல் மாகா­ணத்தின் குரு­நாகல் மாவட்­டத்தின் பல முஸ்லிம் பிர­தே­சங்கள் மற்றும் கம்­பஹா மாவட்­டத்தின் மினு­வாங் ­கொடை உள்­ளிட்ட பிர­தே­சங்­களில் மேற் ­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளினால், முஸ்லிம்களின் பல­கோடி சொத்­துக்கள் இ­ழக்கப்பட்டிருப்பதாக பிர­தேச மக்கள் ஊட­கங்­க­ளுக்குத் தெரிவித் துள்ளனர். இத்­தாக்­கு­தல்கள் முஸ்­லிம்­களின் வாழ்­வு­ரி­மையைக் கேள்­விக்­கு­றி­ யாக்­கி­யிருக்கின்றது. ஈடுசெய்ய முடி­யாத இழப்­புக்­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கின் றது. இவை மாத்­தி­ர­மன்றி தாக்­கு­தல்­க­ளுக்­குள்­ளான முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான தொழில் நிறு­வ­னங்­களில் பணி­பு­ரிந்த பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த  ஊழி­யர்­களின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாதித்து வயிற்­றில் அடித்­தி­ருக்­கி­றது. முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மின்றி பெரும்­பான்மை இன தொழி­லா­ளர்­க­ளையும் வேத­னைக்­குள்ளும் நெருக்­க­டிக்­குள்ளும் தள்­ளி­யி­ருக்­கி­றது. 

வன்­மு­றை­யா­ளர்கள் தீயிட்டுக் கொளுத்­தி­யது முஸ்­லிம்­களின் பள்­ளி­வ­சல்கள், கடைகள், வீடுகள், வாக­னங்­களை மாத்­தி­ர­மல்ல, வாழ்­வு­ரி­மை­யையும், சக­வாழ்­வையும், நல்­லி­ணக்­கத்­தையும், சமூக ஒற்று­மை­யையும், அமை­தி­யையும், இயல்பு வாழ்க்­கை­யையும், பிற இனத்­த­வர்­க­ளி­னதும் வாழ்­வா­தா­ரத்­தையும் வாழ்க்­கை­யை­யும்தான் என்­பதை இந்­நாட்டு மக்கள் அனை­வரும் புரிய வேண்­டு­மென சமூக ஆர்­வ­லர்கள் சுட்­டிக்­காட்­டு­கி­றார்கள்.

புனித தினத்தில் தேவா­ல­யங்­களில் குண்­டு­களை வெடிக்க வைத்து அப்­பா­வி­களைக் கொன்றொ­ழித்த கொடி­ய­வர்­க­ளுக்­காக அப்­பாவி முஸ்­லிம்­களின் வாழ்­வு­ரி­மை­யையும், கலா­சா­ரத்­தையும் கேள்­விக்­குட்­ப­டுத்த முனை­வதை  சர்­வதேச சமூக நிறு­வ­னங்கள் முதல் சிங்­கள மற்றும் தமிழ் தேசிய அர­சியல் தலை­வர்கள் வரை கண்­டித்­துள்­ளனர்.  சுய­நல அர­சி­யலுக்­காக அப் ­பாவி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இளை­ஞர்­களைத் தூண்­டி­ விட்டுத் தங்­க­ளது அதி­கா­ரங்­க­ளையும், பத­வி­க­ளையும், வாக்­கு­க­ளையும் பெற்­றுக்­கொள்ளவே முயற்­சிகள் எடுக்கப்படுகின்றன. அழ­கிய நாட்டின் அமை­தியை இழக்கச் செய்து பாது­காப்­பற்ற நாடு என்ற அவ­ப்­பெ­யரை பெற்­றுக்­கொ­டுக்க எந்­த­வொரு தரப்பும் முயற்­சிக்கக் கூடா­தென பல்­வேறு தரப்­பி­ன­ரும் கோரிக்கை விடுத்து வரு­கின்­றனர்.

இந்­நி­லையில், 21/4 தாக்­கு­தல்கள் மற்றும் 13/5 வன்­மு­றை­க­ளினால் பாதிக்­கப்­பட்டு நிர்க்­கதியானவர்கள் பொரு­ளா­தார மற்றும் உள­வியல் ரீதி­யாகப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்­கான மனி­தா­பி­மான உத­விகள் விரை­வாகச் சென்­ற­டைய வேண்டும். வடமேல் மாகாணம் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் அரங்­கேற்­றப்­பட்ட வன்­மு­றை­க­ளினால் பலர் வீடு வாசல்­களுடன் அன்­றாடத் தொழி­லையும் இழந்­தி­ருக்­கி­றார்கள். இவர்­க­ளுக்­கான அத்­தி­வா­சிய அன்­றாட நிவா­ர­ணங்­களை வழங்க பொறுப்­புள்­ள­வர்கள் உடன் செயற்­பட வேண்டும்.   குண்­டுத்­தாக்­கு­தல்கள் மற்றும் வன்­மு­றை­களை நேரில்­கண்ட, கேட்­ட­றிந்த பலர் அச்சம், பயம், பரிதவிப்பு போன்ற உள­வியல் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளி­ன் அத்­தி­யா­வ­சிய உட­னடித் தேவைகள் நிறை­வேற்றி வைக்­கப்­ப­டு­வ­துடன் உள­வியல் காயங்­க­ளுக்­கான சிகிச்­சை­களும் வழங்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை­களும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

வன்­முறைத் தாக்­கு­தல்­களும் அர­சியல் களமும்

ஏப்ரல் 21 தினத்தில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலைக் கார­ணம்­காட்டி குரு­நாகல் மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் முஸ்­லிம்கள் மீது நடத்­தப்­பட்ட வன்­முறைத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில்  அர­சியல் பின்­புலம் இருப்­ப­தா­கவும் ஆட்­சி­மாற்­றத்தை இலக்­காக வைத்தே இப்­ப­டி­யான தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வ­தா­கவும் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை குளி­யாப்­பிட்டி உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் அலு­வ­ல­கத் தில் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அத்­துடன், இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்­பட ஏனைய அமைச்­சர்கள் முன்­வைத்த கருத்­துக்­களைச் செவி­ம­டுத்து பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் மீண்டும் பாது­காப்பைப் பலப்­ப­டுத்­து­மாறு பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ரவு வழங்­கிய பிர­தமர், பாது­காப்பு தரப்­பினர் நிலை­மை­களைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வரத் தவ­றி­யமை தொடர்பில் இக்­கூட்­டத்தில் கவனம் செலுத்­தப்­பட்­டது. போதிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை எடுப்பதில் ஏற்­பட்ட பல­ வீ­னமே வன்­செ­யல்கள் உக்­கி­ர­ம­­டை­ வ­தற்குக் கார­ண­மாக  அமைந்த­தென முஸ் லிம்  அமைச்­சர்கள் சார்பில் சுட்­டிக்­காட்­டப்­பட்டது குறிப்பிடத்தக்கது.  

இந்­நி­லையில், வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை அவ­சியமென தமிழ்  தேசியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யுள்ள நிலையில், பழைய தவறைச் செய்ய வேண்­டா­மென மக்கள் விடு­தலை முன்­னணி குறிப்­பிட்­டுள்­ளது. இச்­சந்­தர்ப்­பத்தில், சூத்­தி­ர­தா­ரி­களை சட்­டத்தின் முன் நிறுத்­துங்கள் என  ஐக்­கிய நாடுகள் சபை அறிக்­கை­யொன்றை விடு­துள்­ள­து.வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக அனைத்து மக்களும் ஒன்­றி­ணைய வேண்­டு­மென இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் தெரி­வித்­துள்ளார். 

இவ்­வாறு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைக் கார­ணம்காட்டி திட்­ட­மிட்டு முஸ்­லிம்கள் மீது வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்து பல­கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்­நிலை தொடர்பில் சர்­வ­தேச மற்றும் தேசிய ரீதியில் கருத்­துக்­களும் அறிக்­கை­களும் வெளிவந்­துள்ள நிலையில் அரசியல் உள்­நோக்கம் கொண்ட விஷ­யங்­களில் நாம் சிக்­கிக்­கொள்ளக் கூடாது. வன்­மு­றையை உரு­வாக்­கு­ப­வர்கள் யாராக இருந்­தாலும் அவர்கள் தீவி­ர­வா­திகள்தான்.

சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும் 

நாட்டை வீழ்த்த வேண்­டு­மென்றே அவர் கள் விரும்­புகிறார்கள் என வன்­முறைத் தாக்­கு­ தல்கள் குறித்த கண்டன அறிக்­கை­க ளில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்­னாள், இந்நாள் தலை­வர்கள் சுட்­டி­க்­காட்­டி­யிருப்பதும் குறிப்பிடத்தக்கதே. 

சுதந்­திரம் பெற்ற ஜன­நா­யகத் தேச­மொன்றில் மனித உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­வது அவ­சியம். எந்­த­வொரு நப­ரி­னாலோ,  ஒரு குழு­வி­னாலோ ஒரு தனி­ந­ப­ரது அல்­லது ஓர் இனத்­தி­னது உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­கின்ற, மிதிக்­கப்­ப­டு­கின்­ற­போது, அவ்­வு­ரி­மை­க­ளுக்கு பங்கம் ஏற்­ப­டு­ கின்­ற­போது குறிப்­பிட்ட தனி­ந­ப­ருக்­கெ­தி­ராக அல்­லது அந்தக் குழு­விற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது நாட்டை ஆளும் ஆட்­சி­யா­ளர்­களின் தார்­மீகப் பொறுப்­பாகும்.

அவ்­வாறு குற்றம் புரிவோர், குற்றச் செயல் இடம்­பெ­று­வ­தற்கு தூண்­டுகோலாக இருப் போருக்கு எதி­ராகச் சட்டம் அதன் கட­மையை சரி­யாக நிலை­நி­றுத்­தும்­போ­துதான் அத்­தே­சத்தில் ஜன­நா­யகம் மலரும். 

ஆக, மனித உரி­மை­களை மதிக்­கின்ற, ஜன­நா­ய­கத்­திற்கு மதிப்­ப­ளிக்­கின்ற பல்­ லின சமூகம் வாழும் ஒரு சுதந்­திரத் தேசத் தில் ஓர் இனம் மற்­று­மொரு இனத்­தினால் வஞ்­சிக்­கப்­ப­டு­வதை தடுத்து நிறுத்­த­வேண்­டி­யது அந்த தேசத்தின் அர­சையே சாரும்.  இது ஒரு ஜன­நா­யக நாடு. இந்த நாட்டில் வாழ்கின்ற எந்­த­ வொரு இனமும் அந்த இனத்­துக்­கு­ரித்­தான உரி­மை­க­ளுடன் வாழவும் கல்வி கற்­கவும் தொழில் புரி­யவும் கலை, கலா­சார பண்­பாட்டு மத விட­யங்­களைப் பின்­பற்­றவும் இந்­நாட்டின் அர­சியல் சாசனம் இடம்­வ­குத்­துள்­ளது. ஆனால், ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் வெறுக்கும், கண்­டிக்கும் ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களைக் கார­ணங்­காட்டி முஸ்­லிம்­களின் சொத்­துக்­களை அழித்­தொ­ழித்­த­வர்கள் முஸ்­லிம்­களின் கலா­சாரம், வர்த்­தக நட­வ­டிக்கை உள்­ளிட்ட பல செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­கவும் பிர­சா­ரங்­க­ளையும் தடை­க­ளையும் ஏற் ­ப­டுத்தி முஸ்­லிம்­களை வாழ­விடக் கூடாது என்று செயற்­ப­டு­கி­றார்­க­ளா என்ற கேள்வியும் எழு­கி­றது. 

ஒரு தேசிய இனத்­தி­ன­ரா­க­வி­ருக்கும் உரிமை ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் உண்டு என் றும் எவ­ரி­னதும் தேசிய இனத்­துவம் மனப் ­போக்­கான வகையில் இழக்கப்படுவதோ அவ­ரது தேசிய இனத்­து­வத்தை மாற்­று­வ­தற்­கான உரிமை மறுக்­கப்­ப­டு­வதோ ஆகாது எனவும் ஐ.நா மனித உரி­மைகள், உல­க­பொ­துப்­ பி­ர­க­ட­னத்தின் 15ஆவது உறுப்­புரை சுட்­டிக்­காட்­டு­கி­றது.

ஒரு நிறு­வன அமைப்­பு­மு­றையால் அந்­நி­று­வன ஆளுமை எல்­லைக்குள் வாழும் அனை­வ­ரையும் ஒழுங்­கு­ப­டுத்தும் விதிகள், நெறி­மு­றைகள் போன்­ற­வற்றைக் குறிக்­கும் ஒரு குறிப்­பிட்ட செயல் அல்­லது செயல் தவிர்ப்பு குறித்த தண்­டனை வழங்­கு­கிற அதி­கா­ரத்தை தன்­ன­கத்தே கொண்­டி­ருக்கும் தனித்­தன்மை கொண்­ட­துதான் சட்டம்.

மனி­தனை மனி­தனாய் வாழ வைக்­கவும் மற்றும் நிறு­வ­னங்­களின் முறையான இயக்­கத்­திற்கும் சட்டம் தேவை. அனை­வரும் சுதந்­தி­ர­மா­கவும் பாது­காப்­பு­டனும் நீதி­யு­டனும், சம­மா­கவும், உரி­மை­க­ளோடும், அமை­தி­யா­கவும் வாழ்ந்­திட சட்டம் வழி­ வகை செய்­கி­றது. 

குற்றம் விளை­வித்தால் அந்தக் குற்­றத்­திற்கு தண்­டனை வழங்க இந்­நாட்டில் சட்டம் இருக்­கி­றது. ஏனெனில் சட்­டத்­தின்முன் எல்­லோரும் சம­மா­ன­வர்கள். அத­னால்தான் ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் தேடிக் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இந்­நி­லை­யில, குரு­நாகல் மாவட்­டத்தின் பல பிர­தே­சங்­க­ளிலும் கம்­பஹா மாவட்­டத்தின் மினு­வாங்­கொடை பிர­தே­சத்­திலும் வன்­­மு­றை­களைத் தூண்­டி­விட்­ட­வர்கள் மற்றும் வன்­மு­றை­களில் ஈடு­பட்­ட­வர்கள் என 81பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்கள் தெரிவிக்கின்றன. அதிதீவிர போக்­கு­டை­ய­வர்­க­ளாகக் கரு­தப்­ப­டுகின்ற அமித் வீர­சிங்க, நாமல் குமார மற்றும் டேன் பிரி­யசாத் ஆகி­யோரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களில் அடங்­குவர். 

இச்­சந்­தர்ப்­பத்தில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறை­வுக்கு வந்­ததன் பின்னர் இன­வாதம் இனம் மாறி­யி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இனம் மாறும் இனவாத் தாக்­கு­தல்­களின் தொட­ராக 2014இல் அளுத்­த­க­மயிலும்  2017இல் கிந்­தோட்­டை­யிலும், 2018இல் அம்­பாறை திகனப் பிர­தே­சங்­க­ளிலும் கடந்த 13 மற்றும் 14ஆம் திக­தி­களில் குரு­நகால் மற்றும் கம்­பஹா மாவட்டப் பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளையும் குறிப்­பி­டலாம். 

குற்றம் செய்­தார்கள், குற்றம் செய்யத் தூண்­டி­னார்கள் என்று நீதி­யையும் நியாயத்­தையும் சட்­ட­வ­ரம்­பு­க­ளையும் மதிக்­கின்­ற­வர்­கள் சுட்­டிக் ­காட்­டப்­ப­டு­ப­வர்கள் சட்­டத்­தினால் தண்­டிக்­கப்­பட வேண்டும். ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களில் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்க வேண்டும். அதற்­கான தனி­நபர் பிரேர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வர­வுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்­பிட்­டி­ருந்­த­தன் மூலம் குற்றம் செய்வோருக்கு பார­பட்­ச­மற்ற தண்­டனை வழங்­கப்­பட வேண்­டு­மென்­பதில் முஸ்­லிம்­களின் நிலைப்­பாடு எடுத்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 

 நாட்டின் அமைதி, சக­வாழ்வு, நல்­லி­ணக்கம், சமூக ஒற்­றுமை, சமூக ஒரு­மைப்­பாடு, சமா­தானம் என்­பன மக்­க­ளுக்­கி­டையில் நிலைக்க வேண்டும் என விரும்பும் அனை­வரும் இந்த வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்த தங்­க­ளது மன­ச்சாட்யின் அடிப்­ப­டையில் முன்­வர வேண்­டு­ம். 

சட்டத்தை எவரும் கையில் எடுக்கக் கூடாது. அவ்வாறு சட்டத்தைக் கையில் எடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கூறிவருகிறார். இவ்வாறான நிலையில் சட்டம் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்படும் இலங் கைச் சட்டங்கள், நாட்டின் இன ஒற்று மைக்கும், அமைதிக்கும் எதிராகச் செயற் படுவோருக்கு   எதிராகவும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல்  உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டு ஒழுங்கு சட்டத்தின் 3ஆம் பிரிவானது, எவரா வது போரைப் பரப்பினால், அல்லது பாரபட்சத்தை, எதிர்ப்பு உணர்ச்சியை, வன்முறையைத் தூண்டுவதாக அமையும் தேசிய, இன அல்லது மதரீதியிலான பகைமையை ஆதரித்தலோ கூடாது எனக் குறிப்பிடுகிறது.

அத்துடன், குற்றம் புரிவதற்கு எத்தனிக் கும், அதனைப் புரிவதில் உதவி புரியும் அல்லது உடந்தையாயிருக்கும் அல்லது புரியப்போவதாக அச்சுறுத்துகின்ற ஒவ் வொரு வரும் இச்சட்டத்தின் கீழ் தவறொன் றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென குறித்த சட்டம் சுட்டிக்காட்டுகிறது

இவ்வாறு சட்டம் உள்ள நிலையில், அச்சட்டமானது அதன் பொறுப்பை நிறை வேற்றுமாயின் இன ஒற்றுமைக்கும் சமூக சகவாழ்வுக்கும் நாட்டின் அமைதிக் கும் பங்கம் ஏற்பட மாட்டாது. பல் லாண்டு காலங்கள் இந்த நாட்டில் இன  ஒற்றுமையுடன் வாழும் சகலரும்  தங்க ளுக் குரிய இனத்துவ உரிமையுடன் நிம்ம தியாக வாழ முடியும். 

இந்நிலையில், இந்நாட்டு முஸ்லிம்கள் தங்களது வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்வதுடன் நாட்டில், தேசிய அமைதி, சமாதானம், சகவாழ்வு நல்லிண க்கம் என்பவற்றைக் கட்டியெழுப் புவ தற்கு உழைக்கும் அத்தனை தரப்புக் குக்களு டனும் தொடர்ச்சி யாக ஒன்றி ணைந்து அனைத்து இன மக்களும்  நிம்மதியாக வாழ தங்களது பூரண ஒத்து ழைப்புக்களை வழங்க வேண்டு மென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதையும் பதிவிட வேண்டியுள்ளது.

எம்.எம்.ஏ.ஸமட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22