அரசாங்கத்தை விரட்டியடிக்க அனைவரும் மேதின நிகழ்வில் பங்கேற்க வேண்டும் : திஸ்ஸ

Published By: Priyatharshan

26 Apr, 2016 | 04:21 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டத்தின் ஆரம்பமாக கருதி அனைத்து இன மக்களும் எதிர்வரும் மே தின நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென  முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண  அறைகூவல் விடுத்தார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்திர் கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் மாநாடு இன்று இடம்பெற்றது. 

இதன் போது உரையாற்றுகையிலேயே  முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சர்வதேச நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளுக்கு அடிப்பணிந்து இலங்கையை மீண்டும்  மேற்குலகத்தின் காலணித்துவமாக மாற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அத்துடன் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிப்பணிந்து நாட்டை கடன் சுமையில் தள்ளி விட்டுள்ளதுடன் இவற்றின் பின்னிலையில் இருந்து அமெரிக்காவே செயற்படுகின்றது. 

இந்த ஆபத்துகள் தொடர்பில் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.  

எனவே, எதிர்வரும் மே தினத்தை தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டத்தின் ஆரம்பமாக கருதி அனைத்து இன மக்களும் மேதின நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22