(வாஸ் கூஞ்ஞ)


மன்னாரிலுள்ள வட மாகாண சபை உள்ளரங்க விளையாட்டு அரங்கில் 41 ஆவது தேசிய விளையாட்டு விழா  இன்று சனிக்கிழமை  ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இவ் தேசிய விளையாட்டு ஆரம்ப விழாவுக்கு மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய பிரதம அதிதியாகவும் தேசிய விளையாட்டுத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ரி.எம்.எஸ்.பி.பண்டார, மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ஸ்ரணி டீ மெல், வட மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் எஸ்.எம்.ராஜா ரணசிங்க, மன்னார் பிரதேச செயலாளர் வசந்தகுமார், முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.


அதிதிகள் மற்றும் வீரவீராங்கனைகள் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியிலிருந்து உள்ளரங்க விளையாட்டு மைதானம் வரை சிங்கள மற்றும் தமிழ் கலாசார முறைப்படி அழைத்து வரப்பட்டனர்.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலிருந்தும் ஆண்,பெண் இருபாலாரும் கலந்து கொள்ளும் தேசிய விளையாட்டுப் போட்டியானது இன்று 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறும்.


விளையாட்டுப் போட்டியை இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டு சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.

போட்டிகள்  அனைத்தும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி  இறுதி நாளான 30 ஆம் திகதி காலை 9 மணிக்கு  ஆரம்பமாகும்.