யாழில் அதிரடிப்படையினரால் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு

Published By: R. Kalaichelvan

17 May, 2019 | 05:56 PM
image

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றை தமது உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வெளி மாகாணங்களுக்கான பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாகவுள்ள கட்டடத்தில் இந்த மதுபானங்கள் இன்று பிற்பகல் சிறப்பு அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டன.

“வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று தொடக்கம் 4 நாள்களுக்கு மதுபானசாலைகளை பூட்டுவதற்கு மதுவரித் திணைக்களம் கட்டளையிட்டது.

இந்த நிலையில் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான மதுபானப் போத்தல்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக  கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்ணை பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள கட்டடம் சிறப்பு அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்டது.

அங்கு மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டன. அதனை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் முளவைப் பகுதியைச் சேர்ந்தவர். மற்றொருவர் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்” என சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31