நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு புரளி: பலப்படுத்தப்பட்டுள்ளது பாதுகாப்பு..!

Published By: J.G.Stephan

17 May, 2019 | 02:39 PM
image

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆலய சூழலில் உள்ள வீதிகளில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன்,  இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆலய சூழலுக்குள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

வடக்கு மாகாண ஆளுநருக்கு அநாமதேய கடிதம் ஒன்று நேற்று கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த கடிதத்தில் தனது கணவரும், வேறு சிலரும் இணைந்து நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.



இதனையடுத்தே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 













முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44