"வன்­மு­றைகள் முஸ்­லிம்­களை வேறு திசைக்கு தள்­ளி­விடும் அபாயம்"

Published By: Digital Desk 3

17 May, 2019 | 11:26 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்லிம் மக்கள் மீது மேற்­கொள்­ளப்­படும் வன்­மு­றைகள், நெருக்­க­டிகள்  அவர்­களை வேறு திசைக்கு தள்­ளி­வி­டுமோ என்ற அச்சம் இருக்­கின்­றது. அதனால் இடம்­பெற்ற சம்­ப­வத்­துடன் ஒட்­டு­மொத்த முஸ்லிம் மக்­க­ளையும் சந்­தேகக்கண்­கொண்டுபார்க்­கக்­கூ­டாது என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரி­வித்தார்.

முஸ்லிம் சிவில் அமைப்­பினால் நேற்று இலங்கை மன்­றக்­கல்­லூ­ரியில் ஏற்­பா­டு­செய்­யப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

பயங்­க­ர­வாத தாக்­குதல் இடம்­பெற்ற மறு­தி­னமே பாரிய இன­மோதல் ஒன்று ஏற்­ப­டுமா என்ற அச்சம் ஏற்­பட்­டி­ருந்­தது. என்­றாலும் மெல்கம் ரஞ்ஜித் ஆண்­ட­கையின் வழி­காட்டல் மூலம் அவ்­வா­றா­ன­தொரு சம்­பவம் இடம்­பெ­றாமல் தடுக்­கப்­பட்­டது. என்­றாலும் எது இடம்­பெ­றக்­கூ­டாது என்று அனை­வரும் பிரார்த்­தித்­தோமோ அது தற்­போது தலை­தூக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. இத­னை­யிட்டு  கவ­லை­ய­டை­கின்றேன்.

முஸ்லிம் சமு­கத்­துக்குள் இவ்­வா­றான  பயங்­க­ர­வா­திகள் இருந்­த­தை­யிட்டு ஆச்­ச­ரி­ய­ம­டைந்தேன். அதுவும் அர­சியல் ரீதியில் நான் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய அம்­பாறை மாவட்­டத்தில் சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் பயங்­க­வா­திகள் குடி­கொண்­டி­ருந்­துள்­ள­தாக கேள்­விப்­பட்­டதும் மிகவும் வியப்­பா­கவே இருந்­தது. அர­சியல் ரீதியில் எங்­க­ளுக்குள் முரண்­பா­டுகள் இருந்­தி­ருக்­கின்­றன. ஆனால் பயங்­க­ர­வா­திகள் உரு­வா­கு­வார்கள் என்று நினைத்தும் பார்க்­க­வி்­லலை.

பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் ஒட்­டு­மொத்த முஸ்லிம் மக்­க­ளையும் இணைத்­துப்­பார்க்க கூடாது. ஒரு­சிலர் செய்த இந்த காரி­யத்­தினால் முஸ்லிம் சமுகம் இன்று பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றது.தற்­போது முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக சில அடிப்­ப­டை­வா­திகள் ஆரம்­பித்­தி­ருக்கும் வன்­மு­றை­யா­னது வேறு பீதியை ஏற்­ப­டுத்தி  வரு­கின்­றது. பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுடன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு நெருக்­க­டிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இத்­த­கைய நட­வ­டிக்­கையால் சாதா­ரண முஸ்லிம் மக்­களும் பயங்­க­ர­வா­தி­களின் பக்கம் தள்­ளப்­பட்­டு­வி­டுமோ என்ற அச்சம் இருக்­கின்­றது. அதனால் அந்த இடத்­துக்கு முஸ்லிம் மக்­களை தள்­ளி­வி­ட­வேண்டாம் என்று கேட்­டுக்­கொள்­கின்றேன்.

அத்­துடன் இந்த பயங்­க­ர­வாத அடிப்­ப­டை­வாத நட­வ­டிக்­கை­களை தோற்­க­டிப்­ப­தற்கு நாங்கள் அனை­வரும் இலங்­கை­யர்­க­ளாக ஒன்­றி­ணைந்து போரா­ட­வேண்டி இருக்­கின்­றது என்றார்.

இதன்­போது முன்னாள் அமைச்சர் இம்­தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரி­விக்­கையில், 

இனங்­க­ளுக்­கி­டையில் இருக்கும் ஒற்­று­மைத்­தன்­மையை ஆராய்ந்து அதனை மேலோங்­கச்­செய்­வதன் மூலம் இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும். அவ்­வாறு இல்­லாமல் நாங்கள் பிரிந்து செயற்­ப­டு­வதன் மூலம் எமது எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு மோச­மான நாட்­டையே வழங்­க­வேண்­டி­வரும். அதனால் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்­துக்கு யார் காரணம் என்று தீர்ப்பு வழங்க நான் தயா­ராக  இல்லை. என்­றாலும் இதன் பிறகு இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­றா­த­வ­கையில் எங்­களில் மாற்­றங்­களை மேற்­கொள்­ள­வேண்டும்.

அந்­த­வ­கையில் முஸ்­லிம சமு­கத்தில் இடம்­பெற்­றி­ருக்கும் மாற்­றங்­களில் விட்­டுக்­கொ­டுப்­புக்­களை மேற்­கொள்ள நாங்கள் தற்­போது முன்­வந்­தி­ருக்­கின்றோம். ஆரம்ப காலத்தில் முஸ்லிம் சிங்­கள மக்கள் ஒரு குடும்­பம்போல் வாழ்ந்து வந்­த­வர்கள். நாக­ரிக மாற்­றத்­துடன் எமக்­குள்ளும் பிளவு ஏற்­பட்­டது. அத­னடி மீண்டும் ஏற்­ப­டுத்த முயற்சிக்கவேண்டும். எந்த இனத்தைச்சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறிய குழுவினால் பாரிய அழிவை ஏற்படுத்த முடியும். அதற்காக ஒட்டுமொத்த சமுக்ததையும் அந்த குழுவுடன் இணைத்துவிடக்கூடாது. பெரும்பாலானவர்கள் அடிப்படைவாதத்துக்கு எதிராகவே இருக்கின்றனர். 

அதனால் எமது பாடசாலைகளை அடிப்படையாகக்கொண்டு இனங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை இல்லாமலாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46