பாரீஸ் குண்டுவெடிப்பில் வெடித்து சிதறிய தீவிரவாதி: அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட பிரான்ஸ்

Published By: MD.Lucias

26 Apr, 2016 | 03:21 PM
image

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி மும்பை தாக்குதல் பாணியில் தொடர் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. 130 பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களில் முக்கிய குற்றவாளி, சலா அப்தே சிலாம் (வயது 26). குறித்த நபர் பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது, பொலிஸார் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை அவரிடம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாரீஸ் தாக்குதலில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி  ஒருவர் வெடித்து சிதறும் அதிர்ச்சியூட்டும் வீடியோவை பிரான்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.

பாரீஸில் உள்ள உணவகம் ஒன்றிற்கு உள்ளூர் நேரப்படி இரவு 9.40 மணியளவில் இத்தீவிரவாதி செல்கிறார். அங்கு அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், ஒருவித படபடப்புடன் தனது முகத்தினை மறைத்துக்கொண்டு, அங்கு வெறுமையாக இருந்து மேசை ஒன்றை நோக்கி விரைகிறார்.

இவர், அங்கு சென்ற மறுநொடியில், மின்னல் வேகத்தில் வெடித்து சிதறுகையில், இவரது உடல் இரண்டு பாகங்களாக பிரிவதை காண முடிகிறது. உணவருந்த வந்த மற்ற நபர்கள், சிறுவித காயங்களுடன் அலறியவாறு அங்கிருந்து தப்பித்து ஓடுகின்றனர்.

தற்போது இந்த வீடியோ, இது குழந்தைகளுக்கு பொருத்தமான வீடியோ கிடையாது என்ற எச்சரிக்கையுடன் ஒரு நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இச்சம்பத்தில் ஈடுபட்ட தீவிரவாதியின் பெயர் இப்ராகிம் அப்தேசிலாம். இவர் பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான சலா அப்தே சிலாமின் சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47