தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இன்று வவுனியா தாயக அலுவலகத்தில் வைத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை இம்முறை அனைத்து மக்களையும் திரட்டி உளப்பூர்வமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதுடன் இது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடப்பட்டு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர்தெரிவித்தார்.

வவுனியா கலை மகள் விளையாட்டு மைதானத்தில் மே 18 ஆம் திகதி மாலை 4 மணிக்கு அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன் அன்று காலை 6 மணி தொடக்கம் 8 மணி வரையான காலப்பகுதிக்குள் வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதஸ்தலங்களிலும் யுத்தத்தில் இறந்த அனைத்து மக்களுக்காகவும் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும், பொது அமைப்புகள் மற்றும் ஏனைய கட்சிகளும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில்கலந்து யுத்தத்தில் இறந்த அனைவருக்காகவும் பிரார்த்தனையில் ஈடுபட கலைமகள் விளையாட்டு மைதானத்திற்கு வருமாறும்அழைக்கப்பட்டுள்ளனர்.