23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சொந்த சாதனையை முறியடித்த ரீட்டா

Published By: Vishnu

15 May, 2019 | 09:57 PM
image

காமி ரீட்டா ஷெர்பா என்வர் 23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

நேபாள நாட்டின் மலையேற்ற குழுவை சேர்ந்த 49 வயதுடைய காமி ரீட்டா ஷெர்பா, 8,850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டில் ஏற தொடங்கினார்.

ஆனால் அடுத்த வருடம் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற குழுவினர் உயிரிழந்தனர்.  இதனால் மலையேறும் முயற்சியை காமி அந்த ஆண்டில் கைவிட்டார்.

ஆனால் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறத் தொடங்கிய அவர், கடந்த 2017 ஆம் ஆண்டில் 21 முறை இச் சிகரத்தில் ஏறிய நபர் என்ற பெருமையை பெற்றார்.  இதனால் அபா ஷெர்பா மற்றும் பூர்பா டஷி ஷெர்பா ஆகியோரின் சாதனை சமன் செய்யப்பட்டது.  இவர்கள் இருவரும் மலையேற்றத்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.

இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு காமி இந்த சாதனையை முறியடித்து அதிக முறை மலையேறிய நபர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.  

அதுமாத்திரமன்றி தொடர்ந்து இந்த வருடமும் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டார்.  அதன்படி இன்று காலை மற்ற ஷெர்பாக்களுடன் இணைந்து 23 ஆவது முறையாக சிகரத்தின் உச்சிக்கு சென்று தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right