இரத்த அழுத்தம் ஒரு நோயல்ல...

Published By: Daya

15 May, 2019 | 12:37 PM
image

 தெற்காசியாவில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இரண்டாவது உச்சபட்ச காரணியாக உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருக்கிறது. ஆனால் இது ஒரு நோயல்ல என்றும், இதுகுறித்து முழுமையான விழிப்புணர்வும், முறையான சிகிச்சையும் பெற்றால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழ இயலும்.

இன்றைய சூழலில் நான்கில் மூன்று பேருக்கு உயர் குருதி அழுத்த பாதிப்பு இருக்கிறது. இதில் 45 சதவீதத்தினர் தான் பரிசோதனை செய்து கொண்டு, உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். அதில் 8 சதவீத மக்கள் மட்டுமே உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையை பெற்றுக்கொண்டு, அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 15 வயது முதல் 49 வயதுவரை உள்ளவர்கள் இதைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வு பெறவில்லை என்றே சொல்லலாம்.

இரத்த அழுத்த பாதிப்பு இதய நோய் பாதிப்பையும், இரத்தக் குழாய் தொடர்பான பாதிப்பையும் ஏற்படுத்தும் முக்கிய காரணி என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அதே தருணத்தில் உயர் இரத்த அழுத்தம் ஒரு நோயல்ல என்றும், உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளில் சில குறைபாடுகள் இருக்கிறது என்பதற்கான அறிகுறியாக தான் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

தலைசுற்றல், சுவாசித்தலில் இயல்பின்மை, தலைவலி, சோர்வு, நெஞ்சு வலி, படபடப்பு, மூக்கில் ரத்தம் வடிதல் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக இரத்த அழுத்தம் குறித்த பரிசோதனையை முழுமையாக மேற்கொண்டு அதற்கான சிகிச்சையையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையையும் உறுதியாக பின்பற்ற வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29