பாகிஸ்தானின் இமாலய இலக்கை துரத்தியடித்த இங்கிலாந்து!

Published By: Vishnu

15 May, 2019 | 11:56 AM
image

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 359 என்ற வெற்றியிலக்கை துரத்தியடித்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஒரு இருபதுக்கு - 20, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்று வருகிறது.

இதில் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று, இருபதுக்கு 20 தொடரை தனதாக்கியது.

கடந்த 08 ஆம் திகதி ஆரம்பமான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 11 ஆம் திகதி இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ஓட்டங்களினாலும் வெற்றிபெற்றது.

இந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் பிரிஸ்டலில் ஆரம்பமானது. 

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 9 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களை குவித்தது.

ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான இமாம் உல்-ஹக் 131 பந்துகளில் 16 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்களாக 151 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். அவருக்கு அடுத்த படியாக ஆசிப் அலி 52 ஓட்டத்துடனும், ஹாரிஸ் செளஹேல் 41 ஓட்டத்தையும் அதிகபடியாக எடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுக்களையும், டாம் குர்ரன் 2 விக்கெட்டுக்களையும், பிளங்கெட் மற்றும் டேவிட் வில்லி தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

359 என்ற பாரிய வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 359 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோனி பெயர்ஸ்டோ 93 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 15 நான்கு ஓட்டம் அடங்களாக 128 ஓட்டத்துடனும், ஜோசன் ரோய் 55 பந்துகளில் 4 ஆறு ஓட்டம், 8 நான்கு ஓட்டம் அடங்களாக 76 ஓட்டத்துடனும், ஜேய் ரூட் 43 ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ் 37 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், மொய்ன் அலி 46 ஓட்டத்துடனும், அணித் தலைவர் ஈயன் மொர்கன் 17 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஜூனைட் கான், இமாட் வஸீம் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரில் 5:2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையேயான நான்காவது போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதியும், ஐந்தாவது போட்டி 19 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35