இலங்கையில் நடைபெற்ற போரில் சர்வதேச நீதிமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளி திமுக தலைவர் கருணாநிதி என, நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,இலங்கையில் போர் தீவிரமாக நடந்த நேரத்தில் அவர்களுக்கு போர் வீரர்களையும், இராணுவத் உபகரணங்களையும் அள்ளிக்கொடுத்தது காங்கிரஸ்.


அந்த நேரத்தில் தமிழகத்தை ஆண்ட கருணாநிதி போரைத் தடுக்க முயற்சி செய்தாரா? மஹிந்த ராஜபக்ஷ முதல் குற்றவாளி என்றால், அடுத்த குற்றவாளி கருணாநிதிதான். இவரையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றார்.