பொது இடங்களில் முகத்தை மறைப்பதை தடுக்கும் வர்த்தமானி வெளியீடு!

Published By: Vishnu

14 May, 2019 | 06:29 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பொது இடங்களில் முகத்தை மறைப்பதற்கு தடைவிதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.  

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 5 ஆம் பிரிவின் கீழ்  இந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், ஏதாவது ஆடை, உடுப்பு அல்லது துணிகள், ஒருவரை அடையாளம் காண ஏதேனும் வகையில் சிரமமாக்கும் வகையில்,  முழு முகத்தையும் மறைக்கும் வண்ணம்  பொது இடத்தில் அணியப்படல் ஆகாது.

இவ்வாறு அணிபவர்கள், இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, பொலிஸ் அதிகாரிகள் அல்லது சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்  உத்தரவுக்கமைய, ஒருவரை அடையாளம் காண, காதுகள் உட்பட  முழு முகத்தை மறைக்கும் எந்த ஒன்றினையும் அகற்ற வேண்டி நேரிடும்.

இங்கு முழு முகம் என குறிப்பிடப்படுவது, நெற்றியில் இருந்து வாய்க்கு கீழுள்ள நாடி வரைஎன்பதாகும். இங்கு காதுகள் உள்ளடங்காது எனவும் குறித்த வர்த்தமனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தககுதல்களுடன் தொடர்புடைய அமைப்பாக கருதபப்டும் தேசிய தெளஹீத் ஜமாத் உள்ளிட்ட மூன்று அமைப்புக்களை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53