சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் கையடக்கதொலைபேசிகள் தரக்குறைவாகவும், பாதுகாப்பு இல்லாமையால் இருப்பதால் இந்தியா தடைச் செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஐ.எம்.இ.ஐ எண் இல்லாத ஒரு சில கையடக்கதொலைபேசிகள் தடைச் செய்யப்பட்டுள்ளது.

உலக வணிக அமைப்பு விதியின் படி தற்போது, குறிப்பிட்ட நாட்டின் இறக்குமதியை முழுமையாக தடைச் செய்ய முடியாது என்றும் அவர் மேலும், தெரிவித்தார்.