வெளிநாட்டவர்களின் இலங்கை வருகைக்கான பயண அறிவுத்தல் தொடர்கிறது

Published By: Daya

14 May, 2019 | 04:56 PM
image

(செய்திப்பிரிவு)

சுற்றுலா  பயணிகள்  இப்போது இலங்கைக்கு  பாதுகாப்பாக வரலாம் என்று  அரசாங்கம் கூறுகின்ற போதிலும் பல நாடுகள் அவற்றின் பயண அறிவுறுத்தல்களை  தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தொடர்ந்து  உல்லாச பயணிகளின் வருகையில் வீழுச்சி ஏற்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக பல குறுகிய கால திட்டங்களை இலங்கை  சுற்றுலா பயணத்துறை அறிவித்தது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அரசாங்கம் அறிவித்தது.

ஆனால்  அமெரிக்கா, ஐக்கிய  இராச்சியம் மற்றும்  அவுஸ்ரேலியா உள்ளிட்ட பல நாடுகள் அவற்றின் முன்னைய பயண அறிவுறுத்தல்களை தொடர்ந்து பேணுகின்றன. சில நாடுகள் அவற்றின் பயண அறிவுறுத்தல்களே கடந்த சில தினங்களாக  முஸ்லிம்  மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளையும் உள்ளடக்கி  மேலதிக அறிவுறுத்தல்களையும் விடுத்திருக்கின்றன.

 பிரித்தானிய  பிரஜைகள் இலங்கைக்கு  அத்தியாவசியமான பயணங்களை தவிர அங்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என வெளியுறவு மற்றும் பொதுநலவான அமைச்சு  அறிவுறுத்தியிருந்தது. கடந்த 13ஆம்  திகதியில் இருந்து  வடமேல் மாகாணத்தின்  பல பகுதிகளில்  வன்முறைகள் வெடித்ததை அடுத்து ஊரடங்கு சட்டம்  பிறப்பிக்கப்பட்டமை குறித்தும்   பிரித்தானிய  பிரஜைகளுக்கு அந்த அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

 இலங்கையில்  பயங்கரவாதிகளின்  தாக்குதல் இடம் பெற கூடிய சாத்தியம் இருப்பதாக  குறிப்பிட்டுள்ள அவுஸ்ரேலியா இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்காக  தேவை குறித்து  மறுபரிசீலனை  செய்யுமாறு தனது  நாட்டு பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது. அதே வேளை அமெரிக்காவும், இந்தியாவும்  ஏற்கெனவே வெளியிட்ட பயண அறிவுறுத்தல்களை தொடர்ந்து பேணுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40