ஆயுதங்களுடன் ஒருவர் கைது ; பொழுது போக்கிற்காக வைத்திருந்தாராம் !

Published By: R. Kalaichelvan

14 May, 2019 | 03:47 PM
image

வெல்லவாயவில் நேற்று மீட்கபட்ட ஆயுதங்களின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை தெஹிவளை சரணங்கரா மாவத்தையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முஹமட் அப்துல் வாகிப் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது 12 வேட்டை துப்பாக்கிகள், ரி- 56 துப்பாக்கி ரவைகள் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கி ரவைகள் உட்பட வெடிப்பொருட்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு சந்தேக நபரான முஹமட் அப்துல் வாகிப் வீட்டினை சோதனையிட்ட பொழுது வீட்டில் இருந்து பல ஆயுதங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபரை கொகுவல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதோடு, சந்தேக நபரிடம் தீவிரவாத குழுக்கள் மற்றும் பாதாள உலகக்குழுக்களுடன் தொடர்புள்ளதாக எனும்  இருக்கின்றதா எனும் கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசராணைகளின் பின் குறித்த சந்தேக நபர் தான் பொழுது போக்கிற்காக ஆயுதங்களை வைத்திருந்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01