காத்தான்குடியில் ஆயுதங்கள், வாள்கள் மீட்பு 

Published By: Daya

14 May, 2019 | 02:55 PM
image

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா கிராமத்தில் கைவிடப்பட்ட நிலையில்  ரி-56 ரக துப்பாக்கி, மகசீன், துப்பாக்கி ரவைகள் கைக்குண்டு, வாள், கத்திகள், தொலைநோக்கு கருவி ஆகியன இன்று செவ்வாய்க்கிழமை  இராணுவத்தினரால் மீட்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி முதலாம் பிரிவு வாவிக்கரை வீதியில் எள்ள களப்பு பகுதியை சோதனையிட்டபோது அங்கிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் 5 மகசீன் துப்பாக்கி ரவைகள் கைக்குண்டு ஒன்று வாள் 2 கத்திகள், தொலை நோக்கு கருவி  ஒன்று உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில் ஒரு துப்பாக்கி மற்றும் ரவைகள் , கத்தி போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் கைவிடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச்செய்யப்பட்டன.

இன்று பிற்பகல் கர்பலா கிராமத்தில் உள்ள குப்பை போடும் இடத்தில் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த கைக்குண்டுகள் போடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்று அது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கும் அறிவிக்கப்பட்டது.

இதன்போது குறித்த பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காத்தான்குடி பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தபோதிலும் வேறு எந்த பொருட்களும் மீட்கப்படவில்லை.

இதனைத்தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினரால் இரண்டு குண்டுகளும் செயலிழக்கச்செய்யப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21