வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் கௌஷால் சில்வா 

Published By: MD.Lucias

26 Apr, 2016 | 10:34 AM
image

பயிற்­சியின் போது தலையில் பந்து அடிப்­பட்ட நிலையில்  வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை கிரிக்கெட் வீரர் கௌஷால் சில்வா சிகிச்சைகள் நிறைவடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இங்­கி­லாந்து சுற்றுப் பய­ணத்­திற்­காக, கண்டி பல்­லே­கலை மைதா­னத்தில் பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­த­போதே, இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ரான கௌஷால் காய­ம­டைந்­தார்.

உட­ன­டி­யாக கண்டி மருத்­து­வ­ம­னையில் சேர்க்­கப்­பட்ட பின்னர், மேல­திக சிகிச்­சைக்­காக ஹெலி­கொப்டர் மூலம் அவர் கொழும்பு வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்­து­வ­ரப்­பட்டார்.

கௌஷால் சில்வா விக்­கெட்­டுக்கு அருகே களத்­த­டுப்பில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, தினேஷ் சந்­திமால் அடித்த பந்தே கௌஷாலின் தலையில் பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அவரை பரி­சோ­தித்த வைத்­தி­யர்கள் அவ­ருக்கு ஆபத்து ஏது­மில்­லை­யென்று தெரி­வித்­தனர்.

ஆனாலும் கௌஷால் சில்வா இங்­கி­லாந்து தொடரில் கலந்­து­கொள்­வாரா இல்­லையா என்பது இன்னும் சில நாட்களில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­க இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் வைத்­தியர் குழு தெரி­வித்­துள்­ளது.

இங்­கி­லாந்து சுற்றுப் பய­ணத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி போட்டியில் கௌஷால் சில்வா சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35