ஐ.சி.சி.யின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த அவிஷ்க 

Published By: Vishnu

13 May, 2019 | 06:53 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் 'ஏ' அணியின் பயிற்றுநருமான அவிஷ்க குணவர்தன, எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி தான் முழு நிரபராதி எனவும் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என எஸ்.எஸ்.சி. கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்போதே அவிஷ்க குணவர்தன இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவிஷ்க குணவர்தன, 

‘‘ஐ.சி.சி.யின் குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து எவ்வித விசாரணையுமின்றி ஸ்ரீலங்கா கிரிக்கெட் எனது சேவையை இடைநிறுத்தியமை நியாயமற்றது. இது குறித்து எனது சட்டத்தரணி க்ரிஷ்மால் வர்ணசூரிய ஊடாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் நியாயம் கோரவுள்ளேன். 

இன்று வெறுமனே என் தரப்பு நியாயங்களை மட்டுமல்லாமல் என்னுடைய சக கிரிக்கெட் வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் கயவர்களால் பல வருட காலமாக உழைப்பு திருடப்பட்டுவரும் இலங்கை கிரிக்கெட்டின் விசுவாசமான சேவகர்கள் பலரின் சார்பாகவும் அவர்களின் நியாயங்களையும் எடுத்துக்கூறவே இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளேன்.

கிரிக்கெட் விளையாட்டில் நான் வைத்திருக்கும் மதிப்பைப் பற்றியும் பயிற்றுநராக எனது கண்ணியம் பற்றியும் என்னை அறிந்தவர்களுக்கு நான் கூறத்தேவையில்லை. நான் 11 வயதிலிருந்து கிரிக்கெ்ட் விளையாடிவந்துள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எனது பெயருக்கோ விளையாட்டின் மகத்துவத்துக்கோ களங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்தவிதமான சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டதில்லை.

தனக்கு எதிராக ஒரே ஒரு வீரர் மாத்திரமே ஐ.சி.சி.யிடம் முறைப்பாடு செய்தார், அந்த வீரரது ஒழுக்கம் தொடர்பில் திருப்திகொள்ளாததால் சில தடவைகள் அந்த வீரரை குழாத்திலிருந்த நீக்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஐ.சி.சி. தன்னை அணுகியதிலிருந்து பூரண ஒத்துழைப்பை வழங்கியதாகவும் தனது பிரத்தியேக கையடக்கத் தொலைபேசி, வங்கிக் கணக்குகள் அனைத்தையும் சமர்ப்பித்ததாகவும் அவிஷ்க கூறினார்.

‘‘ஆனால், எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுவதற்கு முன்னர் தண்டனை வழங்கப்பட்டவனாக நிற்கின்றேன். எனவே எனக்கும் மற்றைய வீரர்களுக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு எதிராக போராட முடிவெடுத்துள்ளேன். நான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கான விசாரணையாவது நடைபெறும் என எதிர்பார்க்கின்றேன். அநீதிக்கு எதிரான போராட்டம் கடினமானது என்பதை அறிவேன். ஆனால் இங்கிருந்து நான் பயந்து பின்வாங்கப்போவதில்லை. அநீதிக்கெதிராக உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் போராடுவேன்’’ என்றார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2017 இல் நடைபெற்ற பத்து 10 கிரிக்கெட் போட்டிகளின்போது நுவன் சொய்ஸாவும் அவிஷ்க குணவர்தனவும் ஐ.சி.சி.யின் ஒழுங்கு விதிமுறைகளை மீறியதாக ஐ.சி.சி. கடந்த வெள்ளிக்கிழமைன்று குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58